பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் : வையை (6) . . 59 வழியே செல்லுமாறு ള ஊர்திகளைச் செலுத்தியும் சென்ற நிலை, போர்க்களத்தை நோக்கி முன்னணிப் படைவீரர்கள் நெருங்கிச் சென்றாற்போன்ற ஆரவாரத்துடன் இருந்தது என்க. - அந்தணர் கலங்கினர் சேரி இளையர் செலவரு நிலையர் வலியர் அல்லோர் துறைதுறை அயர - மெலியர் அல்லோர் விருந்து புனல் அயரச் 40 சாறும் சேறும் நெய்யும் மலரும் - நாறுபு நிகழும் யாறு வரலாறு; நாறுபு நிகழும் யாறு கண்டழிந்து வேறுபடு புனலென விரைமண்ணுக் கலிழைப் - - புலம்புரி அந்தணர் கலங்கினர் மருண்டு; 45 - மேற்கண்டவாறு மதுரை நகரத்து மக்கள் பலரும் ஆற்றங் கரையிலே திரிவாராயினர். இத்னால், புறஞ்சேரிப் பகுதியி லிருந்த இளைஞர் தாம் வெளியே செல்வதற்கும் அரியரான நிலையினர்.ஆயினர். அனைவரும் ஒருவரை முற்பட ஒருவராகச் சென்று துற்ைகளில் இடம்பிடிக்க முயன்றனர். வலிமையற்றோர் ஆற்றுநீரிற் குதித்தாடப் பயந்தனர்; துறை துறையாகத் துறை யருகேயே நின்று அவர் நீராடுவாரும் ஆயினர். மெலியவரல்லாத வன்மையாளரோ புதுப்புனலிற் குதித்து நீர்விளையாட்டு அயரலாயினர். இதனால் அவர்கள் அணிந் திருந்த பலவகை மணப்பொருள்களாகிய சாறும் சந்தனக் குங்குமக்குழம்பாகிய சேறும், புழுகுநெய்யும், மலரும் ஆற்று வெள்ளத்திற் கரைந்து கலந்தன. இவற்றால் கலப்புற்று வந்த அப் புதுப்புனல், தானும் அம் மணத்தோடு வரலாயிற்று. அறிவு பெருகுவதற்கு உரியவான நூல்களைக் கற்பவர் அந்தணர். அவர்கள் வையைத் துறைக்கு நீராட வந்தனர். புதுமணத்தோடு செல்லும் நீரைக் கண்டு நெஞ்சம் தளர்ந்தனர். தூய்மைகெட்டுத் தன்மை வேறுபட்ட நீரெனக் கண்டு, மக்கள் தாம் பூசியிருந்த மணக்கலவைகளோடு வரும் அதனில் நீராட மனம் வெறுத்துக் கலக்கமுற்று மயங்கி நின்றனர். QQug: சேரி - புறஞ்சேரி, நகர்க் கோட்டைப் புறத்தே ஆற்றங்கரை ஓரமாகக் குடியிருந்தோர்; அவர் செலவரு நிலையின்ரானது அப்பகுதியிற் புதுப்புனலாட வருவாரது கூட்டமும், அவர்களது யானை குதிரைகளாகிய ஊர்திகளும் நெருங்கி மிகுந்து விட்டதனால், வலியர் மனவலிமையும் உடல் வலிமையும் கொண்டோர்; மெலியர் - அவ்வலிமை அற்றோர். சாறு - மணப் பொருள்களுள் ஒருவகை சேறு - சந்தன குங்குமக் குழம்பு. நெய் - கூந்தற்கு ஊட்டும் மணநெய். மண்ணுதல்