பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - பரிபாடல் மூலமும் உரையும் கெடாத விருந்தாகத் திகழும் புதியராய பரத்தையருக் கென்று தன்ழயினைக் கொய்தோனே! அத் தளிர்தாம் நீ கொணர்ந்துள்ள இவை என்பதனை நீயும் அறிந்தவன் அன்றோ!' என்று சொல்லி, அவன் தந்த தழையை ஏற்க மறுத்து ஒதுக்கு கின்றாள் அவள். அவன் பணிமொழி பேசியும், தளர்ந்தானைப் போலக் காட்டியும், அவளிடத்துத் தன்பால் இரக்கத்தை உண்டாக்க முயலுகின்றான். அதனைக் கண்டாள் அவள். "பணி மொழி பேசியும், தளர்ந்தானைப்போலக் காட்டியும் நடிக்கும் பண்பாளனே! முன்னெல்லாம் நீயும் எனக்குத் தழை கொணர்வாய். அதுதான் பசுமை விளங்குஞ் சிறந்த உருவத்தோடு விளங்கும். இப்பொழுது கொணர்ந்துள்ள இதுவோ துவண்டி ருக்கின்றது. இதனைக் காண்பாயாக’ என்கின்றாள். யாவளோ ஒருத்திக்காகக் கொய்து சென்றாய். அவள் ஏற்க மறுத்தாள். அதனால் இவ்விடத்தே கொணர்ந்தாய்’ என்று, குறிப்பாகப் பேசுகின்றாள் அவள் நின் களவு உறவு அவளுடன் இனி வாய்க்கும்.' நின் மார்பிடத்துத் தாரும் வாடும்படியாக மிக வருந்திக் கொய்து கொணர்ந்திருக்கின்றனை இப்படிக் கொய்து கொண்டு போய்க் கொடுத்த பின்பும் அவள் நினக்கு உடன்பட மாட்டா Goππ?'. - - கொய்த இத் தழையைக் கையிற் பற்றியவனாகச் சென்று, அவளை இரந்து வேண்டியிருப்பாயே! அவ்வாறு வேண்டிய பின்னரும் அவள் உனக்கு இசைய மாட்டாளோ? சொல்வா யாக’ என்று குத்திப் பேசியவளாக, அவனைப் பழிக்கின்றாள் அவள். - - "வையையிற் புதுப்பெருக்கு மிகுதி. அதனைக் கடக்கப் புனைந்த கட்டுமரத்தில் ஏறி வரவேண்டியதாயிற்று. அதனாற் காலம் தாழ்த்தது. இத் தளிரும் நீரிலே அலைப்புண்டு துவண்டது. முருகப்பிரான் குடிகொண்டிருக்கும் பரங்குன்றம் சான்று நான் ஏதும் தவறிற்றிலேன், வையைக் கண் புது நீர் வரவு மிகவும் அழகான நீர்ப்பெருக்கு அல்லவோ? அதனைக் காணவும், அதன் பாற் சென்று ஆடிக்களிக்கவும் நீயும் என்னுடன் எழுந்தருள்க’ என்கின்றான் அவன். - சொற்பொருள் : விளிதல் - கெடுதல். விருந்து - புதியவர். விழுவார் - விரும்பப் படுவார். நனியுருவம் - பசுமையோடு கூடிய தன்மை. புணை - கட்டுமரம், தெப்பம். சேய் - குமரன். காமர் - அழகு. - -