பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் ட்வையை (6) 63 விளக்கம் : தன்னை மறைத்து, அவளைத் தெளிவிக்கப் பலவும் கூறுகின்றான் அவன். அவளோ, அவன் சொல்லிலும் செயலிலும் குறைகண்டு மீண்டும் ஊடி ஒதுங்குகின்றாள். அவள், மேலும் அவனை இகழ்ந்து கூறுவது பின்வரும் பகுதி. - - வையை வயமாக வை! ஆமாம் அதுவொக்கும் காதலங் காமம் ஒருக்க வொருதன்மை நிற்குமோ? ஒல்லைச் சுருக்கமும் ஆக்கமும் குளுறல் வையைப் பெருக்கன்றோ? பெற்றாய் பிழை; - - அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்; 75 குருகிரை தேரக் கிடக்கும் பொழிகார் இல், இன்னிள வேனில், இதுவன்றோ வையை நின் வையை வயமாக வை;. ஆமாம். காமர்ப் பெருக்கமன்றோ வையைப் புதுவரவு' எனக் கூறியது பொருந்துவதுதான். காதற்காமமானது முற்றவும் ஒரேதன்மைத்தாக நிற்கும் இயல்பினதோ? விரையச் சுருங்கு வதும், மிகுவதும் வையைப் பெருக்கைப் போலவே அதற்கும் இயல்புதானே! அதனால், ஏதும் சூளுரைத்தலைச் செய்யாதிருப் பாயாக. அதனால், நீயும் தெய்வத்திற்குப் பிழை செய்த ஒரு குற்றத்தையே பெற்றனை - “நின் ஊர் அருகே உள்ளதுதான் எனினும், தெப்பத்தில் ஏறி வரவேண்டிய நிலையில் ஆற்றுநீர் நின்னைக் காலம் தாழ்க்கச் செய்கின்றது! குருகினம் இரைதேடுமளவுக்கு நீர்வற்றிக் கிடக்கும், 'மழை பொழிதற்குரிய கார்காலமும் இதுவன்று. இனிதான இளவேனிற்காலம் இது. இக் காலத்திலும் வையையில் புதுவெள்ளப் பெருக்கம் உண்டாமோ? நின் செயலின் தன்மை யோடு வையையின் தகைமையையும் ஒருசேர வைத்தனையோ? என்கிறாள் அவள். * சொற்பொருள் : ஒருக்க முற்ற, ஒல்லை - விரைய. சுருக்கம் - குறைதல். ஆக்கம் - பெருகுதல் பிழை குற்றம் பதி - ஊர். அம்பிபடகு தெப்பம் குருகு நாரை போன்றன. கார் கார் மேகம் காத்தி வரவு! செல்யாற்றுத் தீம்புனலில் செல்மரம் போல - வவ்வுவல் லார்புனையாகிய மார்பினை 80 என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை, - வையை உடைந்த மடையடைத்தக் கண்ணும் பின்னும் மலிரும் பிசிர்போல இன்னும் அனற்றினை துன்பவிய நீயடைந்தக் கண்ணும் . -