பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 - பரிபாடல் மூலமும் உரையும் இவ்வாறு, தன் தலைவனின் செயலை விறலியிடம் நிக்ழ்ந்தது நிகழ்ந்தாற்போலக் கூறி, அதனால் அவனைத் தான் இனியும் ஏற்றற்கு இயலாது என ஊடி உரைக்கின்றாள். இதனை அடுத்து வரும் பகுதி காட்டும். - - வாடற்க வையை சினவல்நின் உண்கண் சிவப்பஞ்சு வாற்குத் துனி நீங்கி யாடல் தொடங்கு; துனிநணி கன்றி.டின் காமம் கெடுஉம்; மகளிவன் அல்லா நெஞ்சம் உறப்பூட்டக் காய்ந்தே வல்லிருள் நீயல்; அது பிழை யாகுமென 100 இல்லவர் ஆட இரந்து பரந்துழந்து வல்லவர் ஊடல் உணர்த்தர, நல்லாய்! களிப்பர்; குளிப்பரி, காமம் கொடிவிட அளிப்ப; துனிப்ப; ஆங்காங்கு ஆடுப; ஆடவார் நெஞ்சத்து அலர்ந்தமைந்த காமம். 105 வாடற்க வையை நினக்கு! "மகளே நின் மையுண்ட கண்களுள் சிவப்பு எழுமானால் அதற்கு அஞ்சுபவன் நின் காதலன். அவன்பால் நீயும் சினங் கொள்ளாதே. நின் துன்பத்தினின்றும் விலகி ஆடலைத் தொடங்குவாயாக. ஊடற் சினமாகிய துயரமானது மிகவும் முற்றுமாயின் காமவின்பம் அழிந்துபோம், இவன் மயங்கிய நெஞ்சிற்கு மேலும் துன்பத்தை ஊட்டக் கருதிச் சினங்கொண்டு, இவ் வல்லிருள் நேரத்தில், நீயும் இவனைப் போக்கி விடாதே. அது நினக்கே பிழையாக அமையும் என்று முது பெண்டிருள் ஒருத்தி உரைக்கின்றாள். - அதனைக் கேட்டுச் சிறிது உள்ளம் மாறிய காதற் பரத்தையின் சினத்தை, அவ்வீட்டிலுள்ளார் பிறரும், ஆடியும், இரந்தும், பலபடியாக விளக்கி உரைத்தும், தாம் துன்புற்றாற் போல வாடியும் தணியச் செய்கின்றனர். அச்செயலிலே அவர் வல்லவர். அதனால், அவளும் தெளிவுற்றாள். - நல்லவளே! அதன் பின்னர் நம் தலைவனும் அவளும் கூடிக் களித்தனர். காமக்க்டலிற் குளித்துத் திளைத்து இன்புற்றனர். காமவின்பமான கொடிவிட்டுத் தழைக்க அவன் அருளினான்; இடையிடையே அவள் சிறுக ஊடினாள். இவ்வாறு ஊடியும் கூடியும் அவர்கள் புனல் விளையாட்டிற் குரிய துறைகள் பலவிடத்தும் சென்று, ஆங்காங்கே ஆடிக் களித்தனர். வையைப் பேராறே! நின்னிடத்தே போந்து நீராடும், அவரது நெஞ்சங்களிடத்தே மலர்ந்து விளங்கிய காமவிருப்ப மானது என்றும் வாடதிருக்க நீயும் அருள்வாயாக!