பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பரிபாடல் மூலமும் உரையும் பற்றிய செய்திகளைக் கூறுவாயாக’ என்று, தன் மகளிடம் கேட்டாள். அவள் அதனைச் சுவையோடு விளக்கமாகத் தாய்க்கு உரைக்கின்றாள். இப்பொருளமைதியைக் கொண்ட பாடல் இது. - வந்தது புனல்! திரையிரும் பனிப்பெளவம் செவ்விதா அறமுகந்து உரவுரும் உடன்றார்ப்ப ஊர்பொறை கொள்ளாது கரையடை குளமெனக் கழன்றுவான் வயிறழிபு வரைவரை தொடுத்த வயங்குவெள் ளருவி இரவிருள் பகலாக யிடமளிது செலவென்னாது வலனிரங்கு முரசின் தென்னவர் உள்ளிய நிலனுற நிமிர்தானை நெடுநிறை நிவப்பன்ன பெயலால் பொலிந்து பெரும்புனல் பலநந்த நலனந்த நாடணி நந்தப் புலனந்த - . . வந்தன்று வையைப் புனல்- - - 10 : - அலைகளைக் கொண்டதும் பெரியதுமான குளிர்ச்சி கொண்ட கடலினை முறையாக முற்றவும் முகந்துகொண்டதாக, வலிய இடியேறுகள் சினத்தோடு முழங்கத் தம்மேல் ஏறியுள்ள சுமையைத் தாங்கமாட்டாவான மேகங்கள், கரையுடைந்த குளத்து நீரையொப்பத் தம் கட்டுக்குலைந்த வாய், தம் வயிறு கிழியப் பெற்றவாய்ப், பெருமழையினைப் பொழியலாயின. இவ்வாறு வீழ்ந்த மழை நீரால் மலைப் பகுதிகள் எல்லாம் விளங்கும் வெள்ளிய அருவிகளைத் தொடுத்தாற்போல விளங்கின. இரவின் இருட்போதிலும், பகற் போதிலும், செல்லுதற்கான இடம் போதற்கரிது என்று கருதாவாய், அவ்வருவி நீர் சென்று பாய்ந்து சென்றது. ... " வெற்றி வெற்றியென முழங்கும் முரசத்தைக் கொண்ட வரான பாண்டியர். பகைநாட்டைக் கொள்ள்க் கருதிய செயலைச் செய்து முடிப்பதற்கு, நிமிர்ந்து செல்லும் படை வரிசைகள்து தோற்றத்தைப் போன்று, சமநிலத்தை அடைந்து செல்லும் மழைநீரின் தோற்றமும் விளங்கியது. இவ்வாறு வீழ்ந்த புதுமழையினால்ே நிலப்பகுதி அழகுபெற்றது. பெருகிய நீர்த் தேக்கங்கள் பலவும் பெருக்கத்தை அடைந்தன.நாட்டிலே நன்மை உண்டாகுமாறு நாட்டுப்பகுதிகளில் எங்கனும் அழகும் வளமும் பெருகின. வயற்பகுதிகளுள் உழவரின் முயற்சிகள் எழுந்தன. இவ்வாறு பலப்பல எழுச்சிகளையும் ஏற்படுத்தியபடி வந்த மழை வெள்ளமானது, வையையாற்றினும் புதுப்புனலாகப் பெருகி வந்தது. -