பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . s - سی - புலியூர்க்கேசிகன் வையை (7) - -- 69 சொற்பொருள் : இரும்பனிப் பெளவம் - பெரிய குளிர்ந்த கடல்; க்ரியகுளிர்ந்த கடலும் ஆம். செவ்விதா - முறையாக உரவு - வலிமை. உடன்று - சினந்து கழன்று - பொறை நீங்கி, வயிறழிபு வயிறு கிழிந்து வீழ்வதாய். வலன் - வெற்றி நிலன் - பகை நாடு. நிமிர்தானை - தோல்வியே அறியாமையாற் செருக்கி நிமிர்ந்து செல்லும் படை வரிசை நிவப்பு- உயர்ச்சி நந்துதல் பெருகுதல். புனல் - புதுப் புனல், + விளக்கம் : மலையிற்.பெய்த மழைநீர், வரையிழி அருவி களாகப் பாய்ந்து, நிலத்தினைச் சார்ந்து, பல நீர்நிலைகளையும் பெருகச் செய்ததாய், வையைக் கண்ணும் பெருகிவரும் புதுப் புனலாய் வந்தது என்பதாம். அலையலையாக வரும் புது வெள்ளத்து வரவுக்கு அலையலையாகச் செல்லும் பாண்டியர் படையணிகளை உவமை கூறினர். அவை பாண்டியருக்கு வெற்றியைத் தவறாமல் தேடித்தருவது போலவே, ஆற்றுப் புதுப் புனலும் பாண்டியரின் நாட்டிலுள்ள வெம்மையைப் போக்கி வளனைத் தவறாமற் பெருக்கும் என்பதாம். - - புது நாற்றம் பெற்ற புனல் நளியிருஞ் சோலை நரந்தம் தாஅய் ஒளிர்சினை வேங்கை விரிந்தஇன ருதிரலொடு துளியி லுழந்த தோய்வருஞ் சிமைதொறும் வளிவாங்கு சினைய மாமரம்வேர்கீண்டு உயர்ந்துழி யுள்ளன பயம்பிடைப் பரப்பி - உழவர் களிதுங்க முழவு பணைமுரல 15 ஆடலறியா அரிவை போலவும் - . ஊடலறியா உவகையள் போலவும் வேண்டுவழி நடந்து தாங்குதடை பொருது விதியாற்றா னாக்கிய மெய்க்கலவை போலப் 20 பொதுநாற்ற முள்ளுட் கரந்து, புதுநாற்றம் செய்கின்றே செம்பூம்புனல் - - * செறிந்த பெருஞ்சோலைகளிடத்துள்ள நரந்தம் புற்களின் மீது வெள்ளம் பரவி வந்தது. ஒளிரும் கிளைகளைக் கொண்ட வேங்கை மரங்களின் மலர்ந்த பூங்கொத்துக்களின் உதிரல் களோடு கலந்து வந்தது. மழைத் துளிகளால் வருத்தமுற்ற அடைதற்கரியவான மல்ைமுடிகள் தோறும், காற்றால் வளைக்கப்பட்டு முறிந்துபோன மாமரங்களை வேரொடும் பெயர்த்துக்கொண்டு வந்தது. உயரமான இடங்களிலுள்ள பலவற்றையும், பள்ளமான இடங்களிலே பரப்பியபடி வந்தது! உழவர்கள் களிப்பினாலே ஆடி மகிழவும், முழவுகளும் பறைகளும் ஒலிக்கவுமாகப் புதுப்புனல்விழாப் பொலிவோடு