பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο - பரிபாடல் மூலமும் உரையும் வந்தது. ஆடற்கலையை முறைப்படத் தெரியாதவளான ஓர் அரிவையாள் தாறுமாறாக ஆடிவருவ்தைப் போலவும், ஊடற் கலையினை உணர்ந்தறியாதாளான ஒரு பெண், உவகைமிக்கா ளாய்ச் செருக்கோடு செல்வதுபோலவும், புதுவெள்ளம் தன் போக்கிற் செருக்குடன் சென்றது. தான் விரும்பிய வழியாகச் சென்று, தன்னைத் தடுத்த தடைகளைப் பொருதி உடைத்த படியே அது சென்றது. விதிமுறைக்கு இணங்காதவன் ஒருவன், ஆக்கிய, உடலிற்குப் பூசுதற்குரிய கலவைச் சாந்தினைப் போலப், பொதுவான மணமொன்றைத் தனக்குள்ளே மறைத்துக் கொண்டதாகவும், புதுமையான ஒரு மணத்தைச் செய்த படியாகவும், சிவந்த அழகிய புதுப்புனலும் வையைக்கண். பெருக்கெடுத்து வந்தது. . - . சொற்பொருள் : நளி செறிந்த இருஞ்சோலை - பெரிய சோலை; இருளடர்ந்த சோலையுமாம். நரந்தம் - ஒருவகை மனங்கொண்ட புல்.சிமை-மலையுச்சி.வளி காற்று. வேர் கீண்டு - வேரினைத் தோண்டிப் பறித்து. பயம்பு - பள்ளம். களி - களியாட்டு, பணை - பறை விதியாறு - செய்யும் நூல் முறைமை. செம்பூம்புனல்-செம்மண் நிலத்துத் தோய்ந்து வருதலால் சிவப்பு நிறமும், பல மலர்களையும் தளிர்களையும் சுமந்து வருதலால் அழகையும் கொண்ட புதுப்புனல் புது நாற்றம் - புது வகையான மணம் - r விளக்கம் : கட்டுமீறித் தன் போக்கின்படி எல்லாம் பெருகி வருகிறது புதுப்புனல். இதன் போக்கிற்கு ஆடலறியா அரிவை யின் செலவையும், ஊடலறியா மங்கையின் உவகைப் பெருக்கை யும் உவமித்த நயத்தை உணர்ந்து இன்புறுக இன்னின்ன கலந்து அமைத்தால் இன்ன மணத்தைச் சாந்து பெறும் என்னும் முறைமைக்கு மாறாகப் பலவற்றையும் கலந்து அமைத்த சாந்து, அவ்வவற்றின் தனித்தன்மையை உள்ளடக்கிப் புதியவொரு கலவைமணத்தைப் பரப்புவது போலப், பலவற்றையும் சுமந்து வரும் புதுப்புனலும்,அவ்வவற்றின் மணத்தையும் தன்னுள் மறைத் துத் தான் ஓர் புது மணத்தை உடையதாக விளங்கிற்று என்க. r பாய்புனல் பரந்தது! கவிழ்ந்த புனலிற் கயந்தண் கழுநீர் அவிழ்ந்த மலர்மீ துற்றென ஒருசார்; மாதர் மடநல்லார் மணலின் எழுதிய - 25 பாவை சினத்த தெனவழ ஒருசார்; அகவய லிளநெல் அரிகாற் சூடு தொகுபுனல் பரந்தெனத் துடிபட ஒருசார்;