பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் : வையை (7) - - 73 பெண்களின் கைவளைகள், ஆழிகள், தொய்யகங்கள், அணிந்துள்ள துகில்கள், மேகலைகள், காஞ்சிகள் ஆகியவற் றையும், ஆண்களின் தோள்வளைகளையும், மற்றும் அவர்கள் அணிந்தவை அனைத்தையும் கவர்ந்து செல்லும் தன்மை கொண்டதாயும் வெள்ளம் கட்டுமீறிச் சென்றது. g பகைவரை அழித்த் தானையை உடையவனும், தென்னவ னுமாகிய பாண்டியன் தன்னை எதிர்த்துத் தோற்றழிந்த பகைவரது நாட்டிடத்தே புகுந்த காலத்து, அங்குள்ள பல வற்றையும் கவர்ந்து கொள்வதைப்போல, வையையாறு தன்பாற் புகுந்து நீராடுவாரின் பல பொருட்களையும் தான் கவர்ந்து கொண்டதும் அழகுடையதாகவே விளங்கும். சொற்பொருள் : ஏமம் - காவல். துனைந்து விரைந்து கோதை பெண்கள் தலைமாலை. கண்ணி ஆடவர் தலைமாலை. தண்தார் - மார்பிடத்துக் குளிர்ந்த மாலை, இருவருக்கும் பொது. ஆழி - மோதிரம். வாகுவலயம் - தோள்வளை, உடைபுலம் - தோற்றவர் நாடு. மாறுஅட்ட - பகையைக் கொன்றொழித்த, தானை படை. விளக்கம் : பகையழித்த பாண்டியர் படை, தோற்றார் நாட்டுட் சென்று அங்குள்ள பலவற்றையும் கவர்ந்து கொள்ளு தலைப் போல, வெள்ளமும் தன் போக்கில் குறுக்கிட்டவான பல பொருள்களையும் கவர்ந்து, வெற்றிமிடுக்கோடு செல்வதாயிற்று என்பதாம். - - * . - பெருக்கிம் வடிவு புரிந்த தகையினான் யாறாடு வாருள் துரந்து புனல்துவத் தூமலர்க் கண்கள் அமைந்தன; ஆங்கண் அவரு ளொருத்தி கைபுதைஇயவளை ஏக்கழுத்து நாணாற் கரும்பின் அணைமென்றோள் 55 போக்கிச் சிறைப்பிடித்தாள்! ஓர் பொன்னங் கொம்பு பரிந்தவளைக் கைப்பினை நீக்குவான் பாய்வாள் இரும்பீர் வடியொத்து மைவிளங்கும் கண்ணொளியாற் செம்மைப் புதுப்புனல் சென்றிரு ளாயிற்றே • வையைப் பெருக்கு வடிவு - - - 60 அனைவரும் விரும்பத்தகுந்த குணங்களை உடையவன் பாண்டியன். அவனுக்கு உரியது வையையாறு, அவ்வாற்றுப் புதுப்புனலுள் பலரும் குதித்து ஆடி மகிழ்ந்தனர். அவர்களுள் ஒருத்தி பீச்சுங்குழலுள் நீரையேற்றி மற்றொருத்தியின் கண்களை நோக்கித்துவினாள். தூவப்பெற்ற அந்நீரை ஏற்றபடிநின்றவளின் தூய தாமரை மலரைப்போன்ற கண்கள், இமைத்தலின்றி |