பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பரிபாடல் மூலமும் உரையும் அந்நிலையே அமைந்திருந்தன. அவ்விடத்துப் புனல் தூவப்பெற்ற மற்றொருத்தியோ, தன் க்ண்களைக் கையால் மூடிக்கொண்டாள். அங்ங்னம் மூடினாளைத் தோற்றாளாகக் கொண்டனர். நீரைத் தூவியவள் இறுமாப்போடு தன் கழுத்திலிருந்த பொற்கயிற்றால், குங்குமக் குழம்பால் எழுதப் பெற்ற கரும்பையுன்டய மூங்கிலைப் போன்ற மென்மையான தோள்களைக் கட்டி, அவளைச் சிறைப்படுத்தினாள். அதைக் கண்ட பொற்கொம்புபோன்ற மற்றொருத்தி, அவ்வாறு சிறைப்பட்டவளுக்காக இரக்கங் கொண்டாள். அவளுடைய கைக்கட்டை நீக்குவதற்காகத் தானும் பாய்ந்து சென்றாள். அவள் கண்கள் இரும்புவாளால் துண்டாக்கப் பெற்ற மாவடுவைப் போலவும், மையுண்ணப் பெற்றும் விளங்கின. அவளுடைய அக் கருங்கண்களின் ஒளி செந்நிறத்தோடு காணப்பெற்ற புதுப்புனலிற் பட்டது. அதனால் அப் புதுப்புனல் தன் நிறங்கெட்டுத் தானும் கருநிறத்தைக் கொண்டதாக ஆயிற்று. - - சொற்பொருள் : புரிதல்-விரும்புதல்தகை-குணம்,துரத்தல் - செலுத்தல், தூமலர் - தாமரை மலர்; கண் சிவந்தது நீராடியதனால் என்க. ஏக்கழுத்தல் - இறுமாத்தல். நாண் - பொற்கயிறு பரிந்து - அன்புற்று. வடி மாவடி வடிவு அழகு நறா ஆர்ந்தவள் கண் விரும்பிய ஈரணி மெய்யீரந் தீரச் சுரும்பார்க்கும் சூர்நறா ஏந்தினாள் கண்ணெய்தல் பேர்மகிழ் செய்யும் பெருநறயூப் பேணியவே கூர்நறா ஆர்ந்தவள் கண், - - விரும்பத்தகுந்த ஈரமான அணிகளைக் கொண்ட உடலினது ஈரமானது தீரும்பொருட்டு, ஒருத்தி, வண்டு மொய்க்கும் போதைகொண்ட கள்ளைத் தன் கையில் ஏந்தி நின்றாள். அவ்வேளையில் அவள் கண்கள் கரிய நெய்தல் மலரைப்போலத் தோற்றின. அவள் பெருமகிழ்ச்சியை உண்டாக்கும் போதை மிக்க கள்ளைக் குடித்தாள். குடித்ததும், அவளுடைய கருநிறக் கண்கள், பெரிய நறவம் பூவைப்போலச் செந் நிறத்தை அடைந்தன. சொற்பொருள் : ஈரணி-ஈரமான அணிகள். சுரும்பு-வண்டு. சூர்நறா - போதைமிக்க கள். பெருநறா - பெரிய நறவம் பூ, நறவு என்றது கள்ளுக்கும் நறவம் பூவுக்கும் வந்தது க்ாண்க ஊருடன் ஆடும் கண்ணியல் கண்டேத்திக் காரிகைநீர் நோக்கினைப் 65 பாணா தரித்துப் பலபாட, அப் பாட்டுப்