பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - umum-6, &pagpi e-onuli இன்புற அருள்க புரிநரம் பின்கொளைப் புகல்பாலை யேழும் எழுப்புணர் யாழும் இசையும் கூடக் குழலளந்து நிற்ப முழவெழுந் தார்ப்ப மன்மகளிர் சென்னியர் ஆடல் தொடங்கப் 80 பொருதிழி வார்புனற் பொற் பஃது உருமிடி சேர்ந்த முழக்கம் புரையும் - திருமருத முன்றுறை சேர்புனற்கண் துய்ப்பார் தாமந் தலைபுனை பேஎநீர் வையை - நிற்பயம் பாடி விடிவுற்றேமாக்க 85 நிற்படிந்து நீங்காமை யின்றுபுணர்ந் தெனவே. முறுக்குண்ட நரம்பினை இசைத்துக் கொள்ளப் படுவன வாகிய, சொல்லப்பட்ட பாலைப்பண்கள் ஏழினையும் எழுப்ப, தாள அமைதியோடு பொருந்தி நிற்கும் அவையும், அவற்றோடு பொருந்திய இசைப்பாட்டும் ஒன்றுகலந்து எழுந்தன. குழலின் இசையோ அவற்றின் இசையளவை ஒத்து நின்று இசைக்கப் பட்டது. அவற்றோடு கலந்து முழவொலியும் மிகுதியாக ஒலித்தது. அரசனாற் சிறப்புப்பெற்ற அரங்கக்கூத்தியரும் பாணரும் ஆடலைத் தொடங்கினர். கரைகளை மோதியபடி செல்லும் புதுப்புனலின் அழகிதான ஒலியோ, சினத்தோடு முழங்கும் இடிமுழக்கைப்போல விளங்கும். இவ்வாறான ஒலிகளோடும் கூடிய திருமருதமுன்றுறையிடத்துப் பொருந்திய நீரிடத்தே, மூழ்கித்திளைப்பவர் மாலைகளைத் தலைமீதாகப் புனைந்தபடி செல்லும், அச்சந்தரும் நீர்ப்பெருக்கைக் கொண்ட வையைப் பேராறே! - - . இன்று கூடினாற்போலவே, நின்னிடத்தே மூழ்கிப் பெறு கின்ற, இந்த இன்பம் எம்மிடத்திருந்து என்றும் நீங்காதே நிலைப்பதாக நின்னாற் பெறுகின்ற பயன்களைப் பாடிப்பாடி, எம் துன்பம் நீங்கப் பெற்றேமாக, யாமும் இன்புற்று மகிழ் வேமாக! - சொற்பொருள் : புரி - முறுக்கு கொளை கொள்ளுதல்; தாள அமைதியுமாம். பாலை ஏழு செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பால்ை, விளரிப் பாலை, மேற்செம்பாலை என்பன. ‘. . . . ." விளக்கம் : இவ்வாறு தோழி செவிலிக்குச் சொல்லு கின்றாள். இதனைக் கேட்ட செவிலியும், வையையை வாழ்த்து கின்றாள். இறுதி வேண்டுதலை அவள் செய்ததாகவே கொள்க.