பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - பரிபாடல் மூலமும் உரையும் விளக்கம் : கடவுளரும் முனிவரும் தேவரும் பலருமாகிய பிறரும் ஒருங்கிருக்கும் காரணத்தால், திருப்பரங்குன்றமும் கயிலாயமும் தம்முள் ஒத்த சிறப்புடையவாயின என்பதாம். - மாலைச் சுனை இமயக் குன்றினிற் சிறந்து நின் னின்ற நிரையிதழ்த் தாமரை மின் னின்ற விளங்கினர் ஊழா - ஒருநிலைப் பொய்கையோ டொக்கும் நின்குன்றின் 15 அருவிதாழ் மாலைச் சுனை, r இமயக் குன்றினிடத்துள்ள பொய்கைகளுட் சிறந்து விளங்குவதும், நின்னை ஈன்ற காலத்துப் பாயலாகத் தாங்கிய நிறைந்த இதழ்களைக் கொண்ட தாமரை மலர்களைக் கொண் டிருப்பதும், மின்னலிடத்திருந்தும் தோன்றினாற்போன்ற ஒளி விளங்கும் பூங்கொத்துக்களைத் தோற்றுவித்திருப்பதுமான, ஒப்பற்ற நிலையைக் கொண்டதான சரவணப் பொய்கையோடு, நின் பரங்குன்றிடத்துள்ள, அருவி வீழ்ந்தபடியிருக்கும் மயக்கந் தரும் சுனையும் ஒப்புடையதாக விளங்கும்: சொற்பொருள் : திரையிதழ் - வரிசையாக அமைந்த இதழ். இணர் - பூங்கொத்து. ஊழா - தோற்றுவித்திருக்கின்ற - மலைமுழை அதிரும் முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட கதியிற்றே காரின் குரல், குரல் கேட்ட கோழி குன்றதிரக் கூவ மதநனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப 20 எதிர்குதி ராகின்று அதிர்பு மலைமுழை; முதல்வனே! நினக்குரிய யானையாகிய பிணிமுகத்தின் முழக்கினைக் கேட்டாற்போன்ற தன்மைகொண்டது கார் மேகத்தின் இடிக்குரல் ஆகும். அக் காரின் முழக்கைக் கேட்டதும், நின் கோழிச் சேவலானது, தானும் அதற்கெதிராகக் குன்றமே அதிரும்படியாகக் கூவும். அக் குரலைக் கேட்டதும் மிக்க மதத்தைக் கொண்ட யானையும் முழங்கும். இவை மாறிமாறி முழக்கமிட, அம் முழக்கங்கள் மலைக்குகைகளுட் சென்று மோதி எதிரொலிகளாக எழுகின்றன. இவ்வாறு ஒலியும் எதிரொலியு மாக ஒயா முழக்கை உடைத்தாயிருப்பது நின் பரங்குன்றம். - சொற்பொருள் : முருகனின் யானை - பிணிமுகம் என்னும் களிறு கதி - ஒசையின் தன்மை. கோழி - சேவற் கோழி வாரணம் - TGö) GÖT.