பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ဖ္ရစ္သဖ္ရန္ဟင့္ေခါဆေး * Ossicali (8) - 85 முகைமுல்லை வென்றெழில் முத்தேய்க்கும் வெண்பல் நகைசான்ற கனவன்று, நனவன்று நவின்றதை; இடுதுணி கையாறா என்துயர் கூரச் சுடுமிறை ஆற்றிசின், அடிசேர்ந்து சாற்றுமின், ... . தோழியுரைத்ததைக் கேட்டான் தலைவன்; அவ்வாறா யின், நீங்கள் எனக்காக வேண்டிக் கொள்வீராக’ எனக் குறும் பாகப் பின்வருமாறு கூறுகின்றான்: . - - r நேரிழையாளே யார் பிரிய, யார் வருவது? uff G5LLI, யார் விடை கூறுவது? நீர் உரைக்கும் சூளெல்லாம் உண்மையற்ற சூள்' என்கின்றனை - - - "கயத்திடத்துள்ள நெய்தற்பூக்களின் மொட்டுக்கள் இதழ விழ்ந்து மணம்பரப்பி மலர்ந்துள்ளாற் போன்ற, செருக்கிய மையுண்டகண்களையும்,அனைவரும் விரும்பும் நறவம்பூக்களின் இதழினைப்போன்ற ஒளிவீசும் நெற்றியினையும், முல்லை மொட்டுக்களையும் தோற்றத்தால் வெற்றி கொண்டு, முத்தக் களைப் போல விளங்கும் வெள்ளிய பற்களையும் உடையாள் தலைவி. அவளிடத்து யாமுற்ற உறவானது நகைத்தலைப் பொருந்திய கனவுறவு அன்று. “என்மேலிடும் துயரமே காரணமாகக் கொண்டு, என் துயரத்தினை அவளும் சேர்ந்து அடையுமாறு, பகைவரைச் சுட்டு வருத்தும் இறைவனாகிய முருகன் செய்வான் என்பாய். அவ்வாறு அவன் செய்வானாயின், நீர்தாம் அவன் திருவடிகளை யடைந்து, தும் குறையை அவனிடத்தே கூறுவீராக” - சொற்பொருள் : நீர்மையில் சூள் உண்மைத் தன்மையற்ற சூள் மணநகை மணம்பொருந்த மலர்ந்த நிலை, நறவு நறவம்பூ மதர் - செருக்கு. வாள் - ஒளி, நகைசான்ற நகைத்தலைப் பொருந்திய துனி - துயரம். கையாறா - துன்பத்தின் காரணமாக, சுடும் இறை சுட்டெரிக்கும் இறையாகிய முருகப் பிரான். விளக்கம் : பொய்ச் சூளாயின், முருகன் என்னை வருத்துவான் என்பாயாயின், அதனால் யான் நோய்கூற, எனக்கு அன்புடையாளான தலைவியும் துயரடைவாள்; அதுபோக நீதான் முருகனைப் பணிந்து வேண்டுக என்பதாம். தாள் தொழ எழுவோம். மிக ஏற்றதும் மலர்; ஊட்டுதும் அவி, - 80 தோற்றுதும் பாணி, எழுதும் கிணை; முருகன் . தாள்தொழு தண்பரங் குன்று; -