பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - - பரிபாடல் மூலமும் உரையும் அவன் பேச்சைக் கேட்டாள் தோழி. தலைவியையும், தன்னொத்த பிறரையும், முருகனைத் தொழப் போவோம்’ என்று அழைக்கின்றாள். “முருகப்பெருமானது திருவடிகளைத் தொழுது வேண்டுதற் பொருட்டாக, யாமனைவரும் தண்ணிய பரங்குன்றிற்குச் செல்வோம், எழுவீராக. மிகுதியான, மலர்களை அவன் திருவடி களிற் சொரிவோம். அவனுக்குரிய பலியினைப் படைத்து ஊட்டு வோம். தாளத்தோடும் கூடிய பாட்டைப் பாடி வெறியாடுவோம். தடாரிப்பறையினையும் முழக்குவோம். அனைவரும் எழுவீராக” சொற்பொருள் : அவி பலியுணவு. பாணி தாளம் கிணை - தடாரிப் பறை. - - - நீயே காண்க தெரியிழாய் செல்கென்றாய்! எல்லா! யாம் பெற்றோம் ஒருவர்க்கும் பொய்யாநின் வாயிற்சூள் வெளவல்; பருவத்துப் பன்மாண்நீ சேறலின் காண்டை, எருமை இருந்தோட்டி எள்ளியும் காளை செருவம் செயற்கென்னை முன்னைத்தன் சென்னி அருள்வயினான் தூங்கும் மணிகையால் தாக்கி நிரைவளை ஆற்றிருஞ் சூள்! அனைவரும் சென்று முருகனைப் போற்றுகின்றனர். அவ்விடத்தே தலைவியின் செயலைக் காட்டியபடி, தோழி, தலைவனிடத்தே இவ்வாறு கூறுகின்றாள்: “தெரிந்தெடுத்த அணிகளை உடையாளே! முருகனின் சினத்தைத் தணிவிக்குமாறு வேண்டிப் பணிவதற்குச் செல்க” என்று, ஏடா, நீயும் சொன்னாய், அந்த நின் சொல்லாலேயே யாம் நின் தன்மையைத் தெரியப் பெற்றோம். "ஒருவருக்கும் பொய்யுரை கூறாத நின் வாயினிடத்திருந்து, இனியும் சூளுரைத்தலைச் செய்யாதிருப்பாயாக. "எருமைக்கடா ஊர்தியை ஊர்ந்து வருவோனான காலனது ஆணையையும் இகழ்ந்து, அடியவர்க்கு அருள்தரும் காளை முருகப்பெருமான், அவன் பொய்ச்சூள் கூறிய நின்னைச் சினந்து கொள்வதற்கு முன்பாக, நிரைத்த வளைகளை உடையாளான நின் காதலி, அவன் திருமுன்பில் தொங்கும் மணியினைத் தன் கையால் தாக்கி ஒலியெழுப்பியவாறே, பெரிய பொய்ச்சூளால் நின்னை வந்தடையும் துயரத்தை ஆற்றதற்கு, அவனடிகளில் தன் தலையைச் சேர்த்தபடி பணிந்து வேண்டுகின்றாள். நின் பரத்தையரைச் சேர்தற்குச் செல்லும் பருவத்தே, நீதான்