பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 88 . - utun-so poUpin உரையும் அவ்வழியாகச் சிற்றடிகளை உடையவரான பெண்கள், - முருகப்பிரானுக்கு விழாக் கொள்ளுதலை விரும்பியவராகப் புறப்பட்டு வரலாயினர். நிறத்தாலும் மணத்தாலும் வேறுபட்ட சாந்து வகைகளும், சிறப்புப்பொருந்திய புகைத்தற் பொருள் களும், வழிக்கண்ணே வீசுங் காற்றால் அவியாத காப்புள்ள விளக்குகளும், மணங்கமழும் பூக்களும், இசை நுவலும் முழவு களும், மணிகளும், நூற்கயிறுகளும், பொன்னாற் செய்யப் பெற்றுக் காணிக்கை இடுதற்கெனக் கொணரப்படும் மயில்களும், கோடரிகளும், பிணிமுகம் என்னும் யானைகளும், இவையுட் பட்ட பிற வழிபாட்டுப் பொருள்களுமாக, அவர்கள் ஏந்திக் கொண்டு வந்தனர். அன்பரல்லாத பிறரால், அடைதற்கரிய பரங்குன்ற வரையைச் சேர்ந்து, அவர்கள் பெருமானைத் தொழுவாரும் ஆயினர். - சொற்பொருள் : சேண்சிமை - தொலைவாக உயர்ந்த மலையுச்சி. தளி - மழை. சினை - கிளை. குறையா மலர - குறைவின்றி மலர. அளறு - சேறு. நளிமணல் மிக்க மணல். ஞ்ெமர்தல்-பரவுதல் சீறடி சிறியவடி சாந்தம்-மணச்சாந்துகள் வீறு வெற்றிச் சிறப்பு. குடாரி - கோடரி. சேரா - சேர்ந்து. தோழுது வேண்டுவார் கனவில் தொட்டது கையிழை யாகாது நனவிற் சேர்ப்பநின் நளிபுனல் வையை வரபுன லணிகொள வரங்கொள் வோரும்; 105 கருவயிறுறுகெனக் கடம்படுவோரும்; ~ * ! செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும் ஐயமர் அடுகென அருச்சிப் போரும்; . பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும், மஞ்சாடு மலைமுழக்கும் , * 110 துங்சாக் கம்பலை- - - முருகனைத் தொழுவாரான இளமகளிர் பலரும், தத்தம் வேண்டுதலைக் கூறி முறையிடுகின்றனர். அவற்றை இப் பகுதியிற் &5fTGöðITGU) TLÉ). - - “கனவிலே, தாம் தம் காதல்ரோடு சென்று வையைப் புதுப்புனலிலே கைகோத்து நீர்விளையாட்டயர்ந்து இன்புற்றது பிழைபட்டுப்போதல் கூடாது. அவ்வாறே நனவிலும், நினது, வையையின் மிகுந்த புதுப்புனல் வரவிலே யாமும் நீரணி கொண்டு இன்புறுவதற்கு வரமருள்வாயாக’ என்று சிலர் வேண்டினர். - - ન્મ நெடுங்காலமாகப் பிள்ளைப்பேறு இல்லாதோரான சிலர், இனியேனும் எம் வயிற்றிடத்துக் கருப்பம் அடைவதாக என்று