பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

μωμίασελκά και οι ανά ώ) ε" வேண்டிக், காணிக்கையாக இன்னது தருவோம் என்று கூறித் தொழுதபடி யிருந்தனர். எம் காதலர் பொருள் செய்தற்குச் சென்றுள்ளவிடத்துப் பொருள்தான் அவருக்கு எளிதாக வாய்த்தற்கு அருள்வாயாக' என்று சில பெண்கள் தம் வேண்டுதலைப் பெருமானின் செவிக்கண் இட்டுவைத்தபடி வேண்டினர். - - போருக்குச் சென்றுள்ளாரான எம் காதலர், பகைவரை அழித்து வெற்றிவீரராக மீள்வாராக என்று கூறிச் சிலர் அருச்சித்துக் கொண்டிருந்தனர். - இன்னுஞ் சிலர், பெருமானின் புகழைப் பாடிக் கொண் டிருந்தனர். மற்றுஞ் சிலர் பெருமானின் திருமுன்பாக ஆடிக் கொண்டிருந்தனர். . - வேண்டுதலைச் செய்திருந்த பெண்களின் குரலோடு, பாடுவோரின் தாளக்கட்டமைந்த பாடல்களின் ஒலியும், ஆடுவோரின் அரங்கிடத்தே ஆடற்கேற்ப எழுந்த தாள வொலியும், மேகந்தவழும் மலையிடத்தே எதிரொலிக்கும் இடிமுழக்கமும் ஆகப் பரங்குன்றம் இடையறாத ஆரவாரத்தை 'உடையதாக விளங்கிற்று. சொற்பொருள் : நளிபுனல் - மிக்க புனல் புனல் அணி நீரணி விழாவிற் கலந்தாடல். உறுதல் - அடைதல். கடம் படல் - கேட்டது நடப்பின் இன்னது தருவேம் எனக் கடம்பட்டு நிற்றல். ஐ தலைவன். பாணி - தாளம். மஞ்சு - மேகம். கம்பலை - பேராரவாரம் - - - நீராடிய மகளிர்! பைஞ்சுனைப் பாஅய் எழு பாவையர் ஆயிதழ் உண்கண் அலர்முகத் தாமரை தாள்தா மரைத் தோள் தமனியக் கயமலர் - தங்கைப் பதுமம், கொங்கைக் கயமுகை 115 செவ்வாய் ஆம்பல் செல்நீர்த் தாமரை புனல்தாமரையோடு புலம்வேறு பாடுறாக் கூரெயிற்றார் குவிமுலைப் பூணொடு மாரன் ஒப்பார் மார்பணி கலவி - - - தம் காதலரைத்தம்முடன் கூட்டுமாறு கடம்பூண்டோருள் சிலர் புண்ணிய சரவணத்துட் பாய்ந்து நீராடுவாராயினர். அந்த அழகைக் கூறுகின்றது இப்பகுதி. ... * - - பசுமையான சுனைநீரிற் பாய்ந்து, நீர்மேலாகப் பெண்கள் எழுந்தனர். அதனால், மையுண்ட அவர்களின் கருங்கண்கள் அழகிய இதழ்களையுடைய தாமரை இதழ்களைப் போலச்