பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l புலியூர்க்கேசிகன் செவ்வேள் (9) 93

  • நீலமணி, கண் மையோடு கலந்து வருதலாற் கண்ணிர் நீலமணி போலத் தோற்றும் என்க. தணிமழை - சிறந்த மழை. -

விளக்கம் : சலதாரி எனவும், மணிமிடற்றண்ணல் எனவும் சிவபெருமானைக் குறிப்பிட்டது, அவ்வாறு அப் பெருமான் கங்கையையும், மோகினியையும் ஏற்ற காலத்து உமையம்மை அழாதிருந்தாள்; ஆனால் தேவயானைப் பிராட்டியோ அழத் தொடங்கினாள் என்று குறித்தற்காம்; இந் நயத்தை அறிக. இந்திரன் மகள் கண்ணிர் சொரிய, அவன் ஏவலுக்குட்பட்ட மேகங்கள், அவள் துயருக்கு ஆற்றாவாய்த் தாமும் நீரைச் சொரியப் பரங்குன்றிற் காலமல்லா வேனிற் காலத்தும் பெருமழை பெயலாயிற்று என்பதாம். தமிழாய்ப் பயன் கொள்வார் நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர்யீ! கேண்மின் சிறந்தது; காதற் காமம் காமத்துச் சிறந்தது; - - - விருப்போர் ஒத்தது மெய்யுறு. புணர்ச்சி; . 15 புலத்தலிற் சிறந்தது கற்பே; அதுதான் . இரத்தலும் ஈதலும் இவையுள் ளீடாப், பரத்தையுள் ளதவே பண்புறு கழறல்; தோள்புதிதுண்ட பரத்தையிற் சிவப்புற - நாளணிந் துவக்குஞ் சுணங்கறை யதுவே 2O கேளணங் குறமனைக் கிளந்துள சுணங்கறை, - சுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே: அதனால், அகறல் அறியா அணியிழை நல்லார் இகறலைக் கொண்டு துணிக்கும் தவறிலர்; இத் தள்ளப் பொருளியல்பின் தண் டமிழாய் வந்திலார் 25 கொள்ளாரிக் குன்று பயன்; - நான்மறைகளின் வாசகங்களையும் விரித்துரைத்து, அவற்றின் நல்ல புகழை உலகுக்கு விளக்குகின்ற வாய்ப்பேச்சில் வல்லாரான வடமொழிப் புலவர்களே! சிறந்த ஒன்றைக் கூறுவோம்; கேட்டுக் கொள்வீராக. - காதலோடு கூடிப் பெறுகின்ற காமவின்பமே, நுகரப்படும் காமவின்பங்களுள் சிறந்ததாகும். தம்முள் ஒருவருக்கொருவர் விருப்பங் கொண்டோரான தலைவன் தலைவியர், தம்முள் மனமொத்துப் பெறுகின்ற உடற்சேர்க்கை யாகின்ற கூட்டமே காதற் காமம் ஆகும். அஃதன்றிக் கற்புக்காமம் என்பது ஊடலினாற் சிறப்பாவதாகும். அக் கற்பறந்தான் தலைவன் இரந்து வேண்டுதலும், அதற்கிரங்கிய தலைவி தன்னை அவனுக்கு