பக்கம்:பரிபாடல் மூலமும் பரிமேலழகரியற்றிய உரையும்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கணபதி துணை முகவுரை

எண்ணிய வெண்ணியாங் கெய்துப கண்ணுதற் புவள மால்வரை பயந்த கவள யானையின் கழல்பணி வோரே. (திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்.) ஆவியந் தென்றல் வெற்பி னகத்தியன் விரும்புந் தென்பா னாவலந் தீவம் போற்றி நாவலந் தீவன தன்னுண் மூவர்கட் கரியா னிற்ப முத்தமிழ்ச் சங்கத் தெய்வப் பாவலர் வீற்றி ருக்கும் பாண்டிநன் னாடு போற்றி.”

பரிபாடலென்பது, கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர்கள் அருளிச்செய்த *எட்டுத்தொகையுள் ஐந்தாவது; சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்து பொருள்களின் இயற்கை யழகுகளை நன்கு தெரிவிப்பது; மதுரை, வையையாறு, திருமருதந் துறை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலைமலையென்பவற்றின் பண்டைக்கால நிலைமைகளையும் அக்கால நாகரிகமுறையையும் வைதிக ஒழுக்கங்களையும் தெய்வவழிபாட்டுமுறையையும் பிறவழக்கங்களையும் தமிழ்நாட்டின் வரலாறுகள் சிலவற்றையும் செவ்வனே தெரிந்துகொள்ளுதற்குக் கருவியாகவுள்ளது; பதினோராம் 1 பாடலின் முதலிற் கூறப் பெற்றுள்ள கோள்களினிலைமை கடைச் சங்கத்தார் காலத்தை ஒருவகையாகப் புலப்படுத்தும், '(நற்றிணை நல்ல என்னும் வெண்பாவில், 'ஓங்கு பரிபாடல்' எனப் பாராட்டப் பெற்றிருத்தலால் இந்நூலின் உயர்வு நன்கு விளங்கும். - இந்நூல், பரிபாடலென்னும் பாவால் தொகுக்கப் பெற்றமை " யின் இப்பெயர்பெற்றது; பரிபாட்டெனவும் வழங்கும்; இஃது;

  • எட்டுத்தொகை இன்னவையென்பதை, நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ, றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல், கற்றறிந்தார் சொல்லுங்கலியோ டகம்புறமென் தித்திறத்த வெட்டுத் தொகை என்னும் வெண்பாவாலுணர்க ; இவை எண்பெருந்தொகை யெனவும், எண்கோவையெனவும் வழங்கும் .