பக்கம்:பரிபாடல் மூலமும் பரிமேலழகரியற்றிய உரையும்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
v
முகவுரை

என்னும் வெண்பாவால் அப்பாடல்களுள், அ, 'திருமாலுக்கும், 'கூக், முருகக்கடவுளுக்கும் . க, காடுகிழாளுக்கும் உசு, வையை “யாற்றிற்கும் , மதுரைக்கும் உரியனவென்றும் தெரிகின்றன. - . இப்பாடல்களுள், முதலிலிருந்து தொடர்ச்சியாகவுள்ள இரு பத்திரண்டு பாடல்களும், பழைய உரைகளிற் காட்டப்பட்ட மேற் கோள்களிலிருந்து கிடைத்த இரண்டு முழுப்பாடல்களும், சில உறுப்புக்களும், புறத்திரட்டு முதலியவற்றிலிருந்து கிடைத்த சில உறுப்புக்களுமே இப்புத்தகத்திலுள்ளன. இவ்விருபத்திரண்ட்னுள், திருமாலுக்குரியவை ஆறு (க, உ, க, ச, கங, கரு); முருகக்கடவுளுக்குரியவை எட்டு (ரு, அ, கூ, கச, கஎ, கஅ, கசு, உக) ; இப்பதினான்கும் கடவுள் வாழ்த்து ; வையைக் குரியவை எட்டு (ஈ, எ, க0, கக, கஉ, கசு, உ0, உஉ); கடவுள் வாழ்த்துள் திருப்பரங்குன்றமும் திருமாலிருஞ்சோலைமலையும் கூறப்பெற்ற பாடல்களில் மலைவிளையாட்டும், வையைக்குரிய பாடல் 'களிற் புனல்விளையாட்டும் வந்துள்ளன, இவற்றின் பின்னே பதிப்பிக்கப்பெற்ற பகுதிகளுள், திருமா 'லுக்குரிய முழுப்பாடல் ஒன்று; வையைக்குரிய. முழுப்பாடல் ஒன்று ; உறுப்பு ஒன்று ; மதுரைக்குரிய உறுப்புக்கள் ஏழு ; சில உறுப்புக்கள் இன்ன வகையைச் சார்ந்தனவென்று விளங்கவில்லை, 'இருமை வகை தெரிந்து" (குறள், பரி.) என்பதன் விசேட வுரை யில் மேற்கோளாகக் காட்டப்பெற்ற “தெரிமாண் டமிழ் மும் மைத் தென்னம் பொருப்பன், பரிமா நிரையிற் பரந்தன்று வையை" என்பது பரிபாடற்பகுதியென்று 'நுண்பொருண்மாலை யால் பின்பு தெரியவந்தது. முற்றுமுள்ள கையெழுத்துப் பிரதிகளில் ஒவ்வொரு தொகை நூலின் இறுதியிலும் தொகுத்தோர் பெயரும் தொகுப்பித்தோர் பெயரும் அடிகளின் சிற்றெல்லை பேரெல்லைகளும் பெரும்பாலும் வரையப்பெற்றிருக்கும்; இந்நூல் முற்றுமுள்ள பிரதி அகப்படா “மையால் அவற்றுள் ஒன்றும் புலப்படவில்லை. . கிடைத்த பிரதிகளில் இரண்டாவது முதலிய உ0 - பாடல்க ளுக்கு மட்டுமே ஒவ்வொரு பாடலின் பின்னும் துறையும், இயற் றிய ஆசிரியரது பெயரும், அதற்கு இசைவகுத்தோர் பெயரும், அதற்குரிய பண்ணின் பெயரும் எழுதப்பெற்றிருந்தன; ஆனாலும் கிங் - ஆம் பாடலுக்கு இசைவகுத்தோர் பெயர் காணப்படவில்லை,