பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

17

கூறி எங்களுக்காக வாடகைக்குப் பிடித்திருந்த வீட்டின் முகவரியை உறவினரிடம் கொடுத்தேன். மீண்டும் பெரியாரிடம் வந்து சேர்ந்தேன்.

கப்பல் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. 10 மணியிருக்கலாம். ஏணிப்படியை இறக்கினார்கள், பயணிகள் ஒவ்வொருவராக இறங்கினார்கள், நான் பெரியாரை அழைத்துக் கொண்டு இறங்கினேன்.

வலது கையில் தடியும் இடது கை என் தோள்மீதுமாக ஊன்றிக் கொண்டு பெரியார் படிப்படியாக மெதுவாகக் கப்பலை விட்டு இறங்கி வந்தார்.

மணியம்மையும் தோழர் ராஜாராமும் பின்னால் தொடர்ந்துவந்தார்கள்.

துறைமுகத்தில் எதிர்புறத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள்! மற்ற மூன்று புறத்திலும் ஆற்றின் மீது படகுகளில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள்! நான்கு புறமும் தோழர்கள்; மற்றும் ஆதரவாளர்கள்.

பெரியார் தலை வெளியே தெரிந்தவுடன் வாழ்க முழக்கம் வானைப் பிளந்தது.

பெரியார் வாழ்க!
பெரியார் வாழ்க!
பெரியார் வாழ்க!
தொடர்ந்து தோழர்கள் முழங்கினார்கள்.

பயணிகள், பயணிகளை வரவேற்கக் கப்பலடிக்கு வந்திருந்த உறவினர்கள், ராணுவ அதிகாரிகள், கப்பல்துறையினர், சுங்கத் துறையினர் எல்லாரும் பெரியாரையே நோக்கினார்கள்.