பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

25

"சரி, வீடு கீழ்வீடா?, மேல் மாடியா?" நான்,

"கீழ்வீடு தான் கீழ்வீடாக இருக்க வேண்டும் என்று தானே வீடு தேடிப்புறப்பட்டோம்" என்றார்கள்,

"சரி அங்கேயே போகலாம்!" என்றேன் நான்,

நான்கு தோழர்களும் சீறினார்கள்,

"நாங்கள் முன் பணம் கட்டிப் பிடித்த விடு என்னாவது" என்று கேட்டார்கள்.

"இருக்கலாம். கீழ் வீடாக இல்லையே! வேண்டாம்" என்றேன் நான்.

"இல்லை, நாங்கள் பெரியாரை அழைத்துச் செல்கிறோம்" என்றார்கள்.

"கீழ் வீடாக ஒன்று கிடைத்திருக்கும் போது, நீங்கள் ஒரு மாடி வீட்டுக்குக் கூப்பிடுகிறீர்கள். இது முதியவரான பெரியாருக்குத் துன்பம் தருவதாக இருக்கும், முன் பணத்தைத் திருப்பி வாங்குங்கள். கிடைக்காவிட்டால், நான் தந்து விடுகிறேன். இப்போது வீண் தொல்லை கொடுக்காதீர்கள்" என்றேன் நான்.

"ஒரு முஸ்லிம் வீட்டுக்குப் பெரியாரை அழைத்துச் செல்ல நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று அந்த நான்கு பேரும் முழங்கினார்கள்.

திரைப்படத் தொழில் செய்யும் அந்த அன்பர் முஸ்லிம் என்பது அப்போது தான் எனக்குத் தெரியவந்தது. நான் அந்த நான்கு பேரை நோக்கிச் சொன்னேன்.

பெரியார் மீது மரியாதை வைத்து, வாடகையே வேண்டாம் என்று கூறி நமக்காகத் தன் அலுவலக வேலைகளைக் கூட பொருட்படுத்தாமல் தன் வீட்டைத் தர