பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மோல்மேன் பயணம்

43

மோல்மேன் நகருக்கு அவர் அழைக்க வந்திருக்கும் செய்தியைக் கூறிப் பெரியாரின் ஒப்புதலைக் கேட்டேன்.

"நீயும் கூட வருகிறாயா?" என்று பெரியார் கேட்டார்.

என் இயலாமையை அவரிடம் விளக்கிக் கூறினேன். தொழிலில் உள்ள கடமையை எடுத்துச் சொன்னேன்.

"அப்படியானால் மோல்மேனுக்குப் போக வேண்டாம்!" என்று பெரியார் மறுத்துவிட்டார்.

வந்தவர், அன்றே புறப்படுவதாக இருந்தால், தானே உடன் அழைத்துச் செல்வதாகக் கூறினார்.

பெரியார் அதற்கும் மறுத்துவிட்டார்.

மோல்மேனில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்த வாய்ப்பிருக்கும்போது அதைக் கைவிடுவது எனக்குப் பிடிக்கவில்லை.

நான் பெரியாரை வற்புறுத்தி ஒப்புக் கொள்ளச் செய்தேன்.

இரங்கூன் நிகழ்ச்சிகள் இரண்டொன்றை முடித்துக் கொண்டு மூன்றாவது நாள் மோல்மேனுக்குப் புறப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.

உடனிருந்து அழைத்துச் செல்வதாகக் கூறிய அந்த நண்பர் அன்று மாலையே மூன்றாவது நாள் புறப்படும் விமானத்துக்கு மூன்று சீட்டுகள் பதிவு செய்து சீட்டுகளை என்னிடம் கொடுத்து விட்டு அவர் அன்றைக்கே மோல்மேனுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்.

பயனச்சீட்டுகளை நான் பெரியாரிடம் கொடுத்தேன்.

"வந்தவர் இருந்து கூட்டிச் செல்லவில்லை. நீயும் வரவில்லை. மொழி தெரியாத ஊரில் நாங்கள் தனியாகப் போவது சரியில்லை. இந்தச் சீட்டுகளைக் கொடுத்து