பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

பர்மாவில் பெரியார்

தாக்கி சப்பானியர்களை ஒடோட விரட்டி, பர்மாவையும், மலேயாவையும் சப்பானியர் பிடியிலிருந்து மீட்டுவிட்டது.

சப்பானியர் தோற்றோடும் போது மீண்டும் எதிர்க்கட்சிக்காரர்கள், சப்பானியர் விட்டுச்சென்ற ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் பதுக்கிக் கொண்டார்கள்.

வெள்ளையரிடமிருந்து நாடு விடுதலையடைந்தபோது, நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிக் (பசபலா) கட்சியிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது.

வெள்ளையர்கள் வெளியேறி விட்டார்கள். பர்மிய நாடு விடுதலை பெற்றது. கட்டுப்பாடும், நாட்டு ஒற்றுமையும் இல்லாததால் பலப்பல அரசுகள் தோன்றிவிட்டன.

சட்டப்படியான அரசாங்கத்தின் கையில், நகரங்களும், அவற்றைச் சுற்றியுள்ள ஊர்களும் மட்டுமே இருந்தன. சிற்றுார்களும், மலைப்பகுதிகளும், காடுகளும் நூற்றுக்கணக்கான குழுக்களின் ஆட்சிக்கு ஆட்பட்டன. எதிர்க்கட்சிகள் கையில் ஆயுதம் இருந்ததால், அவை தனித்தனியாக கொரில்லா அரசுகளாகச் செயல்பட்டன.

நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். பர்மாவின் தென் பகுதியில் தனி கரீன் நாடு கேட்கும் கரீன்கள் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

பர்மாவின் வட பகுதியில் சீனத் தலைமையில் இயங்கிய வெள்ளைப் பட்டை கம்யூனிஸ்டுகளும், ரஷ்யத் தலைமையில் இயங்கிய சிவப்புப்பட்டை கம்யூனிஸ்டுகளும், தங்கள் ஆதிக்கத்தில் பல பகுதிகளை வைத்துக்