பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

பர்மாவில் பெரியார்


"நான்கு நாட்களாக நானும் பார்க்கிறேன். முதலில் இருந்த உற்சாகம் உன் முகத்தில் தெரியவில்லை. என் மோல்மேன் பயணத்தையும், நான் கோபித்துக் கொண்டதையும் நினைத்து நீ வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய். அன்று கோபித்துக்கொண்டதோடு நான் மறந்துவிட்டேன். நீயும் மறந்துவிடு. என் வாழ்க்கையில் இதைக் காட்டிலும் மோசமான நிலைகளை நான் பார்த்திருக்கிறேன்.

"இதற்கெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயனில்லை. நீ மறந்துவிடு. மறந்துவிடுவேன் என்று சொல்" என்று வாஞ்சையோடு கூறினார்.

"அய்யா நான் மறந்துவிடுகிறேன். வணக்கம்' என்று கூறியபிறகு தான் தன் கைகளை எடுத்துக்கொண்டார்.

பெரியார் என்னை - என் தவறை மன்னித்துவிட்டார் என்ற உணர்வோடு என்னை யழுத்திக் கொண்டிருந்த, மனத்துயரை இறக்கிவிட்டு நான் கப்பலை விட்டு இறங்கிவந்தேன்.

துறைமுகத்தின் வெளியில் எனக்காகத் தோழர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மனநிறைவோடு வணக்கம் சொல்லிக்கொண்டு அவரவர் வீடுநோக்கிப் புறப்பட்டோம்.

பெரியார் வருகை எல்லாருக்கும் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியிருந்தது. அடுத்தடுத்து நடந்த கழகக் கொள்கை பரப்புக் கூட்டங்களில் அந்தப் புத்துணர்வின் எழுச்சியைக் காணமுடிந்தது.