பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்னச் சின்னச் செய்திகள்




பெரியார் தம்முடன் புகைப்படம் எடுத்துக் கொள்பவர்களுக்கு ரூபாய் ஐந்து கட்டணம் வைத்தார். பலர் ஐந்து ரூபாய் கொடுத்து பெரியாருடன் படம் எடுத்துக் கொண்டார்கள். பர்மா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஒருவர் ஏழைத் தொழிலாளி.

"நாங்கள் கூடப் பணம் கொடுத்துத்தான் படம் எடுத்துக் கொள்ளவேண்டுமா?" என்று கேட்டார்.

"நீங்கள் என் பிள்ளைகள். உங்களுக்குக் கட்டாயமில்லை. பதிமுகவைச் சேர்ந்தவர்கள் இலவசமாகவே படம் எடுத்துக்கொள்ளலாம்" என்று பெரியார் விதிவிலக்கு அறிவித்துவிட்டார்.

***

ஒரு நாள் ஒரு பெரியவர் பெரியாரைப் பார்க்க வந்திருத்தார். ஐயா நான் காங்கிரஸ்காரன். உங்களோடு படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.அனுமதிப்பீர்களா?" என்று கேட்டார்.

"காங்கிரஸ் பெரிய கட்சி. ஆகையால் நீங்கள் பத்து ரூபாய் கொடுக்கவேண்டும்" என்றார் பெரியார்.