பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

பர்மாவில் பெரியார்


அந்தப் பெரியவர் பத்துரூபாய் கொடுத்துப் படம் எடுத்துக்கொண்டார்.

***

நெற்றி நிறைய நீறும் உருத்திராட்சமும் சட்டைபோடாமல் மேல் துண்டும் அணிந்திருந்த ஒரு பெரியவர் பெரியாரைப் பார்க்கவந்தார்.

வணக்கம் சொல்லி வரவேற்று இருக்கச் சொல்லி உபசரித்தார் பெரியார்.

அந்தப் பெரியவர் கேட்டார். நீங்கள் நாத்திகர், முஸ்லீம்கள் ஆத்திகர்கள். அவர்களை மட்டும் ஆதரிப்பதன் நோக்கம் என்ன?

பெரியார் பதில் சொன்னார்.

"அவர்கள் யோக்கியமான ஒரே ஒரு கடவுளை வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கடவுள் வைப்பாட்டி வைத்துக்கொள்வதில்லை".

வந்தவர் முகத்தில் ஈயாடவில்லை. எழுந்துபோய் விட்டார்.

***

பாங்கில் வேலைசெய்யும் நண்பர் ஒருவர் பர்மா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர். ஒருநாள் இரவு பெரியாருக்கு விருந்து ஏற்பாடு செய்தார். விருந்துக்கு ஐம்பது பேருக்கு அழைப்பு கொடுத்திருந்தார். இலையில் உட்கார்ந்த பெரியார் திரும்பிப்பார்த்தார். அந்த நண்பரை அழைத்தார்.