பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்னச் சின்னச் செய்திகள்

51


"எனக்குத்தானே விருந்து வைப்பதாகச் சொன்னாய் தாங்கள் மூன்றுபேர். செயலாளர், பொருளாளர் இரண்டு பேர் ஆக ஐந்து பேருக்குச் சொன்னால்போதுமே,எதற்காக இத்தனை பேர்? இப்படிச் செலவாகிற பணத்தையெல்லாம் கொடுத்தால் எனக்கு நிதி சேருமே?" என்றார்.

"மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா, உங்களுக்கு நிதியும் தருகிறேன்." என்று கூறி நூறு ரூபாய் கொடுத்தார்.

***


அகில பர்மா தமிழர் சங்கத்தின் தலைவர் முத்துராமலிங்கத் தேவர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உறவினர். பெரிய மீன் வியாபாரி, மொத்த வியாபாரம், ஏராளமான படகுகளுக்குச் சொந்தக்காரர். பெரியாரைப் பார்க்க வந்திருந்தார். காரில் பத்துக்கிலோ எடையுள்ள ஒரு பெரிய மீன் கொண்டு வந்தார்.

"ஐயா என் அன்பளிப்பு" என்று மீனைத் தூக்கிப் பிடித்தார்.

"நாங்கள் ஒட்டலில் சாப்பாடு எடுத்துச் சாப்பிடுகிறோம். இங்கு சமைக்க ஆளில்லை. இதைச் சமைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள்" என்றார் பெரியார்.

அன்று மாலை தேவர் வீட்டிலிருந்து சாப்பாடு வந்தது பெரியாருக்கு மீன் குழம்புடன்.

சாப்பிட்டு முடித்தவுடன் கூலி எங்கே? என்றார் பெரியார்.

எதற்கு?

விருந்து சாப்பிட்டதற்கு.