பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பர்மாவில் பெரியார்


தேவர் நூறுரூபாய் கொடுத்தார். பெரியார் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார்.

***

கார் வைத்திருந்த நண்பர் ஒருவர் பெரியாருக்கு நகர் சுற்றி பார்ப்பதற்கென்று ஒருநாள் தம் காரைக் கொடுத்திருந்தார்.

துறைமுகப் பகுதியில் சென்று கொண்டிருந்தோம் போலீஸ்காரர்கள் யாரும் காணப்படவில்லை என்ற எண்ணத்தில் காரோட்டி நோ என்ட்ரி போட்டிருந்த பகுதியில் நுழைந்தார். உடனே ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்த போலீஸ்காரன் காரை நிறுத்தினான்.

அவன் காரோட்டியைக் கண்டித்துக் கொண்டிருந்த போது, சற்றுத் தொலைவிலிருந்த ஓர் அதிகாரி ஒடிவந்தார்.

அந்தப் போலீஸ்காரனைக் கோபித்துக்கொண்டார். உள்ளேயிருப்பவரை நீ பார்க்கவில்லையா? அவர் இந்தியப்பொங்கி, பேசாமல் இரு என்று சொல்லிக் காரை போக அனுமதித்தார்.

காரோட்டி, சரியான பாதையில் செல்வதற்காக காரைப் பின்னுக்குச் செலுத்தினார்.

அப்படிப்போனால் சுற்றுவழி. நீ இப்படியே போ என்று நோ என்ட்ரி வழியாகவே போக வற்புறுத்தினார் அந்த போலீஸ் மேலதிகாரி.

***