பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்னச் சின்னச் செய்திகள்

69


"எல்லா மதங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்" என்று ஒரே வரியில் பதிலளித்தார் பெரியார்.

***

டாக்டர் அம்பேத்கார் புத்த மதத்துக்கு மாறியபோது புத்த பிட்சுக்கள் பல சடங்குகள் செய்து சாத்திரமுறைப்படி அவருக்கு தீட்சை செய்து புத்தராக மாற்றினார்கள், அம்பேத்காருடன் சேர்ந்தவர்களும் இவ்வாறே சாத்திர முறைப்படி மதமாற்றம் பெற்றார்கள்.

கருத்து மாற்றத்துக்கு சடங்கு சாத்திரம் எல்லாம் தேவையில்லை என்பது பெரியார் கொள்கை. எனவே டாக்டர் அம்பேத்கார் பல முறை வற்புறுத்தியும் புத்தமதத்திற்கு மாறவில்லை.

புத்தர் பழுத்த நாத்திகராக விளங்கினார். இன்று பெரியார் எவ்வளவு தீவிரமாகப் பேசுகிறாரோ, அதே தீவிரத்தோடு இந்து மதத்தை எதிர்த்துப் போராடியிருந்தார் புத்தர்.

புத்தமதத்தில் ஊடுருவியவர்கள் செய்த சூழ்ச்சியால் புத்தர் இன்று புத்த பகவான் ஆகிவிட்டார். அவருடைய பல், தலைமுடி மற்ற உறுப்புக்கள் இருக்கும் இடமெல்லாம் புத்தர் கோயில்களாகி விட்டன.

இந்த நிலை பிற்காலத்தில் பெரியாருக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கால காலத்துக்கும் அவர் நாத்திகராகவே விளங்கவேண்டும். அப்போதுதான் எதிர்கால இளைஞர்கள் பகுத்தறிவுச் சுடர்களாக ஒளிவீசமுடியும்.