பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரப்பர் பலூன் என்றால் உங்களுக்குப் பிடிக்குமல்லவா? காற்றை அதற்குள்ளே ஊதி, அதன் வாயைக் கட்டிவிட்டு, அதன் உருவத்தையும் நிறத்தையும் பார்த்துக் குழந்தைகள் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள். காற்றைவிட லேசான வாயுவை அந்தப் பலூனில் அடைத்துச் சில சமயங்களில் விற்பார்கள் அல்லவா? லேசான வாயுவுள்ள பலூனை விட்டால் அது உயரத்திலே கிளம்பிப்போகும் என்றும், அதை ஒரு நூலிலே கட்டிப் பிடித்துக் கொண்டால் அப்படியே காற்றில் மிதந்துக்கொண்டிருக்கும் என்றும் முன்பே சொன்னேன். நாமே இப்படிப்பட்ட பலூன்களைப் பறக்க விட்டிருக்கிறோம்.

      காற்றைவிடக் கனம் குறைந்த வாயுவை அடைத்த இந்தப் பலூனைப் போலவே இன்னும் மிகப் பெரியதாகவும் உறுதியுடையதாகவும் உள்ள ஒரு பலூன் செய்து, அதற்

7