குள்ளே காற்றைவிட லேசான வாயுவை அடைத்து, அதைக்கொண்டு ஆகாயத்தில் மிதக்கப் பல பேர் முயற்சி செய்தார்கள். பிரான்ஸ் தேசத்தில் ஜோசப் மான்கால்பியே (Mont Collier), ஸ்டீபன் மான்கால்பியே என்ற இரு சகோ தரர்கள் இருந்தார்கள். அவர்களும் இந்த முயற்சி யிலே ஈடுபட்டார்கள். அவர்கள் 1783-இல் காகித பலூன்கள் செய்து அவற்றின் உள்ளே சாமர்த்தியமாகப் புகையைச் செலுத்தி, அவற்றை ஆகாயத்தில் பறக்கும்படிச் செய்தார்கள். அடுப்பிலிருந்து புகை மேலே கிளம்பிப் போவதை எல்லோரும் பார்த்திருக்கிறோம். புகை, காற்றை விட லேசாக இருப்பதால்தானே மேலே போகிறது ? அதனால், புகையை பலூனில் அடைத்தால், அந்தப் பலூன் பறக்கும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். உண்மையில் புகையை பலூனுக்குள் செலுத்துவதால், அங்கேயுள்ள காற்று உஷ்ணமடைந்து லேசாகிறது. அதனால்தான் பலூன் பறக்கிறது. மான்கால்பியே சகோதரர்கள் செய்த அந்தப் பலூன்கள் ஆகாயத்திலே மேலே கிளம்பின. அதே ஆண்டில் ஜூன் மாதம் 3-ஆம் தேதி அவர்கள் தாங்கள் உண்டாக்கிய பெரிய பலூன் ஒன்றை ஆகாயத்தில் மிதக்கும்படி செய்து பலருக்கும் காண்பித்தார்கள். அந்தப் பலூன் கெட்டியான லினன் துணியால் செய்யப்பட்டது. அதன் விட்டம் 35 அடி என்றால், அது எவ்வளவு பெரிய தாக இருந்திருக்குமென்று யோசித்துப் பாருங்கள். அதற்குள்ளே புகையைச் செலுத்தி, அங்குள்ள காற்றைச் சூடு படுத்தி லேசாக்கியதால் அந்தப் பலூன் 1000 அடி உயரம் மேலே சென்று பத்து கிமிலும்வரை அப்படியே நின்றது. அதற்குள் பலூனிலிருந்த காற்று குளிர்ந்து விட்டதால், பிறகு, அது கீழே இறங்கிவிட்டது. இந்த மாதிரி பலூன் ஒன்றில் முதல்முதலாக ஜீன் Gyrrggu (Jean Pilatre de Rozier) ersärv 1990 G3 ščetrvř மேலே சென்றார். பாரிஸ்"க்குப் பக்கத்திலே 1783-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி இந்த அற்புதம் நடந்தது.
முதலில் அவர் சென்ற பலூன் ஆகாயத்தில் வெகுதூரம்
8