பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பறக்க முடியாது ஏனென்றல், தரையிலே ஒரு முளை அடித்து நீளமான கயிற்றில் கட்டிவைத்திருந்தார்கள். ஆதளால், அது காற்றில் அந்தக் கயிற்றின் உயரத்திற்குப் பறந்து சிறிது நேரத்திற்குப் பிறகு கீழே இறங்கிவிட்டது. மறுபடியும் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அவரும் மறொருவரும் ஒரு பலூனில் பறந்தார்கள். இந்த முறை அந்தப் பலூனைக் கட்டி வைக்கவில்லை. அதனால், அது 25 கி.மி.லும் காற்றிலே மிதந்ததோடு காற்றடித்த திசையிலே சுமார் 5 மைல் துரம் சென்றது. காற்றைச் சூடுபடுத்தி லேசாக்குவதைவிடக் காற்றை விட லேசான வாயுவை பலூனில் அடைப்பது நல்லது என்று பின்னல் கண்டுபிடித்தார்கள். ஹைட்ரஜன் வாயு காற்றை விட லேசானது. அதை அடைத்துப் பலூன் உண்டாக்கினர் இந்த இரண்டுவிதமான பலுன்களிலும் ஆகாயத்தில் உயரச் செல்லுவதும், ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லுவதும், பழக்கத்திற்கு வந்தன. ஆனால், இந்தப் பலூன்களில் நாம் நினைத்த இடத்திற்கெல்லாம் போக முடியாது. காற்று எந்தத் திசையில் அடிக்கிறதோ, அந்தத் திசையில்தான் போக முடியும். காற்றை எதிர்த்துப் போக முடியாது. இவ்வாறு, ஹான்ஸ் பெர்லின் (Hans Berliner) என்பவர் ஜெர்மனியிலிருந்து 1897 மைல் தூரம் பறந்து ரஷ்யாவிலுள்ள யூரல் மலைக்குப் பக்கமாகச் செல்ல முடிந்தது.

இவர் செய்ததைவிடத் துணிச்சலான காரியத்தை பிளாஷார்டு (Blanchard) என்பவர் செய்து காண்பித்தார். ஹான்ஸ் பெர்லினர் தரைப்பகுதியில்தான் தமது விமானத்தில் பறந்தார். விமானம் கீழே இறங்கினாலும் தீங்கில்லாமல் தரையில் இறங்கிவிடலாம். உயிருக்கு ஆபத்து அதிகம் இல்லை. ஆனால், பிளாஷார்டு கடலின்மேல் பறக்க முயற்சி செய்தார். அதற்குத் துணிச்சல் அதிகம் வேண்டும். ஏனெறால் விமானம் கீழே இறங்கத் தொடங்கினால் கடலில் முழுகிப்போக வேண்டியதுதான். கப்பல் ஏதாவது

10