பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பிளாஷார்டு இங்கிலாந்துக்குச் சென்று அங்கிருந்து தமது விமானத்தில் கடலைக் கடந்து பிரான்ஸ் செல்ல ஏற்பாடுகள் செய்தார். 1785-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி பகல் சரியாக ஒரு மணிக்கு அவர் விமானம் ஆகாயத்தில் கிளம்பிற்று. அவரோடுகூட ஒர் அமெரிக்க நண்பரும் பிரயாணம் செய்தார். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அதிசயத்தைப் பார்க்கக் கூடியிருந்தார்கள். பிளாஷார்டின் பலூன் விமானம் முதலில் ஒரு வகையான தொந்தரவுமில்லாமல் பறந்து சென்றது. காற்றும் சாதகமாக அடிக்கவே விமானம் கடலின்மீது பறந்து செல்லும்போது யாதொரு கவலையும் ஏற்படவில்லை. ஆனால், கடலின்மேல் செல்ல வேண்டிய தூரத்தில் கால்பாகத்தைக் கடப்பதற்கு முன்னாலேயே இரண்டாயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த பலூன் விமானம் கீழ்நோக்கி வேகமாக இறங்கத் தொடங்கியது.

   பிளாஷார்டு தம் விமானத்திலே வைத்திருந்த மணல் மூட்டைகளை ஒவ்வொன்றாக கடலுக்குள் தூக்கி எறிந்தார். அதனால் கனம் குறையவே விமானம் மறுபடியும் மேலே உயர்ந்து செல்லத் தொடங்கியது. முதலில் ஏற்பட்ட ஆபத்து இவ்வாறு நீங்கியது.
   ஆனல், கொஞ்ச நேரத்தில் விமானம் மறுபடியும் கீழ் நோக்கி வரலாயிற்று. பிளாஷார்டும் அவருடைய துணை வரும் விமானத்திலிருந்து எவற்றையெல்லாம் கடலுக்குள் எறிய முடியுமோ அவற்றையெல்லாம் வீசி எறிந்தார்கள். ஆப்பிள், ரொட்டி, பிஸ்கோத் எல்லாம் கடலுக்குள் சென்றன. அப்பொழுது விமானம் கீழ்நோக்கி இறங்கிக்கொண்டே இருந்தது.
   காற்று அவர்களுக்குச் சாதகமாகத் தான் அடித்தது. இருந்தாலும் விமானம் கீழ்நோக்கிச் செல்லுவதில் மாறுதல் ஏற்படவில்லை. எப்படியாவது விமானத்தின் பளுவை இன்னும் குறைக்க வேண்டுமென்று பிளாஷார்டும் அவர் துணைவரும் கருதினர்கள். அப்படிச் செய்வதைத் தவிர உயிர் பிழைப்பதற்கு வேறு வழி
                  12