பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிடையாது. கடைசியில் பிளாஷார்டும் அவருடைய துணைவரும் தாங்கள் மேலே போட்டிருந்த உடைகளையும் கழற்றிக் கடலுக்குள்ளே வீசிவிட்டார்கள். இப்படி யெல்லாம் கனத்தைக் குறைத்தும் விமானம் கடலைத் தொடும்படியாக அவ்வளவு கீழே வந்துவிட்டது. பிளாஷார்டும் அவருடைய துணைவரும் வேறு வழியில்லாததால் கடலுக்குள் குதிப்பதற்குத் தயாராக இருந்தார்கள். அந்தச் சமயத்திலே எதிர்பாராத ஒரு காற்று வேகமாக அடித்தது. வேகமாக அடித்து விமானத்தை மேல் நோக்கித் தள்ளியது. அதனால், விமானம் மறுபடியும் உயரக் கிளம்பி, பிரான்ஸ் கடற்கரையை நோக்கிச் செல்லலாயிற்று.

   பிளாஷார்டும் அவருடைய நண்பரும் தீங்கொன்று மில்லாமல் பிரான்ஸ் தேசத்தை அடைந்தார்கள். ஆயிரக் கணக்கான மக்கள் ஆரவாரத்தோடு அவர்களே வரவேற்றார்கள். பிளாஷார்டு பிரான்ஸில் இறங்கிய இடத்தில் ஒரு ஞாபகச் சின்னம் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
   இந்தப் பலூன் விமானங்களெல்லாம் காற்றடிக்கும் திசையில்தான் போகும். காற்றை எதிர்த்துப் போக அவைகளால் முடியாது.
   காற்றை எதிர்த்து நாம் நினைத்த திசையில் போக முடியுமா என்று பிறகு ஆராய்ச்சி செய்தார்கள். 1852-இல் ஹென்ரி கிப்பர்டு (Henri Gifford) என்பவர் ஒரு நீராவி எந்திரத்தை ஒரு பலூனில் வைத்து அதன் உதவியால் காற்றை எதிர்த்துக் கொஞ்சம் தூரம் செறார். அவருடைய பலூன் உருண்டையாக இல்லாமல் மீன் உருவத்தில் அமைந்திருந்தது.
   ஆல்பர்ட்டோ சான்டோஸ்டுமான்ட் என்பவர் நீராவி எந்திரத்திற்குப் பதிலாக பெட்ரோலால் ஒடும் எந்திரத்தை உபயோகப்படுத்தினார். அவருடைய பலூன் மீன் வடிவத்திலே 108 அடி நீளமும் 20 அடி விட்டமும் உடையதாக இருந்தது. அதில் அவர் 1901-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதியன்று பாரிஸ் நகரத்திலே மணிக்குச் சுமார்
                       13