பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19. மைல் வேகத்தில் ஒர் உயரமான கோபுரத்தைச் சுற்றி வந்தார். டுமான்ட் தென் அமெரிக்காவிலுள்ள பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். அவர் தமது பதினெட்டாம் வயதில் பாரிஸுக்கு வந்து அங்கே பலூன் கட்டிப் பறக்கவிடுவதிலும் அதை அபிவிருத்தி செய்வதிலும் காலத்தைக் கழித்தார்.

    அவர் மிகுந்த தைரியம் உடையவர். பலூன் விமானங்களில் ஏறிப் பறக்கும்போது உயிருக்கு ஆபத்து வரும்படியான விபத்துகளுக்கு உட்பட்டிருக்கிறார். இருந்தாலும் தளராமல் புதிய புதிய பலூன்கள் கட்டிப் பறந்து பரிசுகளும் பெற்றர். அவருடைய திறமையாலேயே பிரான்ஸ் தேசத்
 ஜெர்மன் ஆகாயக் கப்பல் ஹிண்டன்பர்க் 

தில் பலருக்குப் பறப்பதில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. பாரிஸ் நகர மக்கள் அவரிடத்தில் அளவற்ற அன்பு கொண்டிருந்தார்கள். டுமான்ட் முக்கியமாகப் பதினான்கு பலூன் விமானங்கள் கட்டினர். ஒன்றைவிட ஒன்று சிறப்பாக இருந்தது.

   அதுமுதல் இந்தப் பலூன் விமானமாகிய ஆகாயக் கப்பல் பல வகைகளிலும் விருத்தியடையலாயிற்று. ஜெர்மன் தேசத்தவராகிய கவுன்ட் ஜெப்பலின் என்பவர் மிகச்சிறந்த ஆகாயக் கப்பல்களெல்லாம் கட்டினர். இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளிலும் பலவிதமான ஆகாயக் கப்பல்கள் கட்டத் தொடங்கினார்கள். ஜெர்மன் தேசத்திலே கட்டியவை மிகச் சிறந்தவை, உலகத்தைச் சுற்றிப் பவளி வந்து புகழ்பெற்ற ஆகாயக்கப்பல்களே அவர்கள் உண்டாக்கினர்கள்.
                      14