இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
இவ்வாறு ஆகாயக்கப்பல்கள் அபிவிருத்தியடைந்து வருகிற காலத்திலேயே வேறொரு விதமான பறக்கும் விமானத்தையும் உண்டாக்கச் சில பேர் முயற்சி செய்தார்கள். ஹைடிரஜன் போன்ற லேசான வாயுவை உள்ளே அடைப்பதனால் பலூன் விமானம் அல்லது ஆகாயக்கப்பல் காற்றை விட லேசாகி மேலே ஆகாயத்தில் கிளம்பிப் பறக்கிறது. கனம் அதிகமாக இருந்தால் அது பறக்க முடியாது.
கனம் அதிகமாக இருந்தாலும் பறக்க முடியாதா என்று மனிதன் யோசனை செய்தான். பறவை ஒரளவு கன மாகத்தான் இருக்கிறது. அது பறக்கும்போது இறக்கை களே உடலோடு சேர்த்து மடக்கிக்கொண்டால் தொப்பென்று பூமியில் விழுந்துவிடும். அவ்வளவு கன
பிரிட்டிஷ் ஆகாயக் கப்பல் R 101
இருந்தாலும் அது மட்டும் எப்படிப் பறக்கிறது? அதைப் போல நாமும் பறக்க முடியாதா என்று சிலர் யோசனை செய்தார்கள்.
பறவை அகன் இறக்கைகளின் சக்தியால் பறக்கிறது என்று சுலபமாகக் கண்டுகொள்ள முடியும். இறக்கைகளை அடிப்பதனால் அது பறந்து செல்கிறது. அந்த மாதிரி நாமும் இறக்கைகளைக் கட்டிக்கொண்டு பறக்கக்கூடாதா என்று பல பேர் ஆலோசனை பண்ணினார்கள். ஆனல், அப்படி இறக்கைகளைக் கட்டிக்கொண்டாலும் பறவைகளைப் போல, அவ்வளவு எளிதாக மனிதன் பறக்க முடியாது. மனிதனுடைய உடம் பின் கனத்தைத் துக்கிக் கொண்டு பறப்பதற்கு வேண்டிய அளவு சக்தி மனிதனுடைய
15