பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கைக்குக் கிடையாது. ஆகையால், அந்த மாதிரி முயற்சி செய்வது வீணென்று கண்டார்கள். ஆனால், மனிதன் பறப்பதற்குச் செய்யும் முயற்சியை மட்டும் விடவில்லை.

    மனிதன் மேலும் ஆலோசனை செய்துபார்த்தான். கருடன் முதலான பறவைகள் இறக்கைகளை வெகுநேரம் வரை அடிக்காமல் அப்படியே விரித்து வைத்துக்கொண்டு ஆகாயத்தில் பறக்கின்றனவே, அவை எப்படிப் பறக்கின்றன என்று யோசித்துப் பார்த்தான். பறவைகள் இறக்கைகளை விரித்து வைத்துக்கொண்டு காற்றில் மிதக்கும் போது தொப்பென்று கீழே விழுவதில்லை. கீழே இறங்கினாலும் மெதுவாக ஒரு சாய்வான தளத்தில் இறங்குவதுபோல வருகின்றன, அல்லது வட்டமிட்டுக்கொண்டே கொஞ்சங் கொஞ்சமாக உயரம் குறையுமாறு மெதுவாக வருகின்றன. அப்படி வருவதைக் கவனித்தபோது மனிதனுக்கு ஒரு புது யோசனை தோன்றியது. பறவை இறக்கைகளே விரித்து வைத்துக்கொண்டிருப்பது போலவே ஒரு விமானத்தைக் கட்டவேண்டும் , அந்த விமானமும் கூடியவரையில் கனம் அதிக மில்லாமல் இருக்க வேண்டும். அப்படி ஒரு விமானத் தைக் கட்டிவிட்டால் அது பறக்குமா என்று நினைத்துப் பார்த்தான்.
   அம்மாதிரியே விமானம் செய்து அதை உயரமான இடத்திலிருந்து காற்றில் விட்டான். அது பறந்து மேலே போகாவிட்டாலும் செங்குத்தாகக் கீழே நிலத்தில் தொப் பென்று விழுந்துவிடவில்லை. சாய்வான தளத்தில் கீழிறங்கிப்போவது போல மெதுவாகக் கொஞ்சதுரம் சென்று நிலத்தில் இறங்கியது. விமானத்திற்குக் கெடுதல் ஒன்றும் நேரவில்லை. சறுக்குப் பாறையில் குழந்தைகள் மேலே இருந்து சறுக்கிக் கீழே வருவது போல் அந்த விமானம் கொஞ்சங்கொஞ்சமாகக் கீழிறங்கி வந்தது.

அதனால் பல பேர் இம்மாதிரி சறுக்கு விமானம் செய்ய முனைந்தார்கள். இந்த விமானத்திற்கு ஆங்கிலத்தில் கிளைடர் (Glider) என்று பெயர். குன்றுகளின் மேலிருந்து அவற்றைப் பறக்கவிட்டார்கள். அவை மெதுவாகக் கொஞ்ச

                       16