பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

துரம் சென்று சிறிது சிறிதாக உயரம் குறைந்துகொண்டே வந்து கடைசியில் பழுதடையாமல் பூமியில் இறங்கின.

   பிறகு, பெரிய கிளைடர்கள் செய்து, அவற்றில் ஏறிச் செல்லவும் முயறார்கள். பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த கேப்டன் லா பரி (Le Bris) என்பவர் 1855-ஆம் ஆண்டில் முதன் முதலாக ஒரு கிளைடரில் பறந்தார். ஜெர்மனி தேசத்
  
   லீலியன்தால் கிளேடர்

தவரான ஆட்டோ லீலியன்தா (Otto Lilienthai) என்பவர், 1891 முதல் 1896 வரை பல கிளைடர்கள் செய்து அவற்றில் பறந்து காட்டினர். ஆக்டேவ் ஒனூட் (Octave Chanute) என்பவர் அமெரிக்கா தேசத்தவர். அவருக்குத் தமது 64-வது வயதில் கிளைடர் கட்டிப் பறப்பதில் ஆசை பிறந்தது. 1896-இல் அவர் தமது முதல் கிளைடரைக் கட்டினர். அவர் கிளாடர் விமானத்தில், சுமார் 2000 தடவை, ஒரு வகையான ஆபத்துமில்லாமல் பறந்திருக்கிருராம் !

   காற்று ஏதாவது ஒரு திசையை நோக்கி அடிக்கிற தல்லவா? சில சமயங்களில் காற்று வீசாமல் அசைவற் றிருக்கிறது. இப்படி ஒரு திசையை நோக்கி அடிப்பதும் அசைவற்றிருப்பதுமல்லாமல் சில இடங்களிலே காற்றிற்கு வேறொரு வகையான ஓட்டமும் உண்டு.

L» LDs –3 17