பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லுள்ள இடங்களில் வசிப்பவர்கள் இதை நன்று அறிந்திருப்பார்கள். இவ்விதமாகக் காற்றிலே ஓட்டங்கள் ஏற்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு ஆகாயத்தில் நீண்ட நேரம் கீழே இறங்காமல் கிளைடரில் பறக்க முடியும். ஒவ்வோர் இடத்திலும் அந்த இடத்திற்கு ஏற்றவாறும் கால நிலைகளுக்கு ஏற்றவாறும் ஏற்படும் இந்தக் காற்ட்டங்களை அனுபவத்தால் தெரிந்துகொள்ளலாம். கருடன், கழுகு முதலிய பறவைகள் அப்படித்தான் வெகு நேரம் வரையில் இறக்கைகளை அடிக்காமலும் கீழே இறங்காமலும் பறக்கின்றன. :

   சறுக்கு விமானத்தில், அதாவது கிளைடரில் பறப்பது பல காடுகளிலும் பரவலாயிற்று. இவ்வாறு கிளைடர் விமானம் அபிவிருத்தியடைந்து வருகின்ற போதே வேறொரு வகையான எந்திர விமானம் உண்டாக்கவும் முயற்சி நடந்தது.
   என்ன இருந்தாலும் கிளைடர் விமானம் காற்றின் உதவியைக்கொண்டுதான் பறக்க முடியும். அப்படிக் காற்றின் உதவியில்லாமல் பறக்கும் எந்திர விமானம் ஒன்றை உண்டாக்கப் பலபேர் முயன்றார்கள்.
   ஹென்சன் என்பவரும் ஸ்டிரிங் பெல்லோ என்பவரும் சேர்ந்து இங்கிலாந்திலே இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். ஹென்சன் முதலில் சிறிய கிளேடர்கள், நீராவி எஞ்சின்கள் ஆகியவற்றில் பல சோதனைகள் நடத்தினர்கள். பிறகு, அவரும் ஸ்டிரிங் பெல்லோவுமாகச் சேர்ந்து நீராவி எஞ்சின் வைத்த ஒரு சிறு விமானத்தைக் கட்டினர்கள். 1847-ஆம் ஆண்டில் அதைப் பறக்கவிட முயற்சி செய்தார்கள். ஆனல் அது பூமியைவிட்டு மேலே கிளம்பவேயில்லை. இந்தத் தோல்வியின் பிறகு ஹென்சன் மறுபடியும் முயற்சி செய்யவில்லை. ஆனால், ஸ்டிரிங்பெல்லோ மட்டும் விடா முயற்சியோடிருந்தார். அவர் கட்டிய சிறிய எந்திர விமானம் 1849 இல் கொஞ்ச தூரம் பறந்தது.
                    19