பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டு புதிய புதிய விமானங்களைக் கட்டுவதில் முனைந்தன.

   ஆகாய விமானத்தின் வேகம் அதிகரித்தது. மணிக்கு நூறு மைல் இருநூறு மைல் முந்நூறு மைல் என்று இப்படி வேகம் அதிகமாகிக்கொண்டே வந்தது. இன்றைக்கு மணிக்கு அறுநூறு மைலுக்கு மேலே செல்லும் விமானங்களும் இருக்கின்றன.

ஹெலிக்கோப்டர் விமானம்

   ஹெலிக்கோப்டர் விமானம், கடல் விமானம், ஜெட் விமானம் என்றிப்படிப் பலவகையான விமானங்கள் இன்று இருக்கின்றன. ஹெலிக்கோப்டர் விமானம் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். அது இருந்த இடத்திலிருந்து செங்குத்தாக மேலே கிளம்பக்கூடியது. இறங்கும் போதும் அவ்வாறே இறங்கும். அதனால் சாதாரண ஆகாய
                      24