பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணி நேரங்கூடப் பிடிக்காது. அப்படி வேகமாகப் போகும் ஜெட் விமானங்கள் உண்டு.

   ஆகாயத்தில் பறப்பது மனிதனுக்கு இன்று சாதாரண மாகிவிட்டது. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள தேசங்களுக்கு இன்று ஒன்றிரண்டு நாள்களில் சென்றுவிடலாம். பறப்பது ஓர் அருமையான காரியம். இதை மனிதன் தனது அறிவின் சக்தியால் செய்து காண்பித்திருக்கிறான். இது மனிதனுடைய அற்புதமான சாதனை அல்லவா? பறவையைப் பார்த்துப் பறக்க முயற்சி செய்த மனிதன் இக்காலத்தில் பறவையைவிட எத்தனையோ மடங்கு அதிகமான வேகத்தில் ஆகாய விமானத்தின் மூலம் பறக்கின்றான்.
                   26