பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனிதனால் பறவையைப்போல் அப்படிப் பறக்க முடியுமா? மனிதனுக்கு இறக்கை இல்லையே!
மனிதனுக்கு இறக்கையில்லாவிட்டாலும் உயர்ந்த அறிவு இருக்கிறதல்லவா? அந்த அறிவைப் பயன்படுத்தி அவன் ஆகாயத்திலே பறக்க ஒரு வழி கண்டுபிடிக்க முடியாதா? இப்படியெல்லாம் நினைத்துப் பார்த்துத்தான் மனிதன் ஆகாயத்திலே பறக்க முயற்சி செய்தான்.

பறவைகள் ஆகாயத்தில் பறப்பதைப் பார்த்து நாமும் பறக்கவேண்டுமென்று ஆசையுண்டாகிறது. முன் காலத்திலேயே எத்தனையோ மனிதர்கள் இப்படி நம்மைப்போல் ஆசைப்பட்டிருக்கிறார்கள். ஆகாயத்தில் பறப்பதைப் பற்றிச் சில பேர் கற்பனையாகக் கதை எழுதினார்கள். தேவர்கள், கந்தருவர்கள் முதலியவர்கள் ஆகாயத்தில் பறந்து செல்லுவார்கள் என்று சொன்னார்கள்.
புஷ்பக விமானம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த விமானம் ஆகாயத்திலே பறந்து செல்லக்கூடியதாம். 2 2