பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அது இராவணனிடம் இருந்ததாக இராமாயணத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. சீவகசிந்தாமணி என்ற நூலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது தமிழிலே உள்ள ஒர் அழகான காப்பியம். அதிலே மயில் போன்ற ஒர் எந்திரத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்மேல் ஏறிக்கொண்டு ஆகாயத்தில் பறந்துபோக முடியுமாம்.

மந்திரவாதிகள் ஒரு சமக்காளத்தின்மேல் உட்கார்ந்து ஆகாயத்திலே பறந்து செல்லுவார்கள் என்று கதை உண்டு. சூனியக்காரிகள் துடைப்பத்தின்மேல், குதிரையின் முதுகின் மேல் உட்காருவது போல உட்கார்ந்து ஆகாயத்திலே பறந்து போவார்களாம். இவையெல்லாம் வெறும் கற்பனைக் கதைகள்.

கற்பனை பறக்கும் சாதனம்

ஆனால், இப்படிக் கற்பனை செய்ததோடு மனிதன் நின்று விடவில்லை. ஆகாயத்திலே பறப்பதற்குப் பல முயற்சிகளும் செய்து பார்த்தான். பல ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் இந்த முயற்சியைத் தொடங்கி இருக்கிறான்.

3

3