பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லியனார்டோ டாவின்சி என்ற பெயர் கொண்ட ஒருவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அவர் இத்தாலி தேசத்தவர்; மிகுந்த திறமைசாலி. ஒவியம் வரைவதிலும் சிற்பம் செய்வதிலும் புகழ்பெற்றவர். இன்னும் பல வழிகளில் அவர் கெட்டிக்காரர். அவர் கி.பி. 1500-ஆம் ஆண்டில் அதாவது, சுமார் 480 ஆண்டுகளுக்கு முன் பறவைகளைப் போலப் பறப்பதற்கு ஒரு சாதனத்தைக் கற்பனை செய்து, அதைப் படமாக வரைந்து காண்பித்தார். பறவைகளே அவர் நன்றாகக் கவனித்து, அவற்றின் உடம்பைப்போல, இந்த எந்திரப் பறவையை அவர் கற்பனை செய்திருக்கிறார். மனிதனே பறவையாக மாறுவதற்கு அவர் கற்பனைத் திறமை வேலை செய்திருக்கிறது. ஆனால், அவருடைய கற்பனையைப் பயன்படுத்தி யாரும் அப்பொழுது பறந்ததாகத் தெரியவில்லை. அவரும் பறக்கவில்லை.

பிரான்ஸில் லானா என்பவர் சுமார் கி.பி. 1650-இல் வேறொரு விதமான கற்பனை செய்தார். நீரிலே படகு செல்லுகின்றது. படகிலே பாய்மரத்தை நட்டு, அதிலே பாயைக் கட்டிவிட்டால் காற்றின் உதவியால் படகு தானாகவே செல்லுகிறது; காற்றுத்தான் அதைத் தள்ளுகிறது. அதே மாதிரி ஆகாயத்திலே படகு ஏன் செல்லக் கூடாது என்று அவர் யோசனை செய்தார். ஆனால், முதலில் படகு ஆகாயத்தில் மிதக்க வேண்டுமே! அதற்கென்ன செய்வது? ஒரு படகு ஆகாயத்தில் மிதக்குமானால் அதில் பாய் கட்டிவிட்டால் காற்று அதைத் தள்ளிக்கொண்டு போகும். சாதாரணப் படகு, நீரிலே தானாக மிதக்கிறது. அதைப்போல, ஆகாயத்திலே இந்தப் படகு முதலில் மிதக்கவேண்டுமல்லவா? அதற்காக அவர் இந்தப் பறக்கும் படகில் செம்பினால் செய்த நான்கு பந்துகளைப் படத்தில் காட்டியுள்ளவாறு அமைக்கலாமென்று நினைத்தார். ஒவ்வொரு பந்தின் உள்ளேயிருக்கும் காற்றையெல்லாம் அகற்றிவிட்டு மறுபடியும் காற்று உள்ளே புகாதவாறு கெட்டியாக அடைத்துவிட்டால் அப்பொழுது அந்தப்

4

4