பக்கம்:பறவைகளைப் பார்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தின்னும் பறவைகளும் காலையிலிருந்து மாலைவரை தமது குஞ்சுகளுக்கு இரைதேடும் வேலையில் ஈடுபட்டிருக்கும். ஓரளவு தாமே ஜீரணம் செய்த உணயைச் சில பறவைகள் குஞ்சுகளுக்கு ஊட்டும். புறாக் குஞ்சுகள் தமது தாயின் வாய்க்குள் அலகைத் துருத்தி ஓரளவு ஜீரணமான உணவை எடுத்துத் தின்னும். தாய்ப் பறவையிடமிருந்து வரும் ஒருதச் சுரப்பும் அதில் கலந்திருக்கும். குஞ்சுகளுக்கு உணவு கொடுப்பது கடினமான வேலை. ஆனால் குஞ்சுகள் தாமே இரை தேடிக் கொள்ளும் வரையில் இப்பணி சலியாது நடை பெறுகின்றது.

சிட்டுக்குருவி, வானம்பாடி போன்ற பறவைகளின் குஞ்சுகளின் கண்கள் முட்டையிலிருந்து வெளிவரும் போது மூடியேயிடுக்கும். அதனால் அக்குஞ்களால் எதுவுமே செய்யமுடியாது. ஒரு வாரமோ இரண்டு வாரமோ ஆன பிறகுதான் அவை கூடுகளை விட்டு வெளியே செல்ல முடியும். இதற்கு மாறாக வாத்துக்குஞ்சு. கோழிக்குஞ்சு, கரைக்கோழிக்குஞ்சு முதலியவை முட்டையிலிருந்து வெளிவரும்போதே திறந்த கண்களுடனும், மென்தூவி நிறைந்தும் இருக்கும். உடனே