பக்கம்:பறவைகளைப் பார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உண்மைகளை அறிந்துகொள்ள முடியும். உங்களைச் சுற்றியுள்ள பறவைகள் எந்தெந்த இடங்களில் வாழ்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். எத்தனை பறவைகள் உங்களைச் சுற்றிலும் இருக்கின்றன? எத்தனை கூடுகள் கட்டி யிருக்கின்றன? ஒவ்வொரு பருவ காலத்திலும் வெவ்வேறு இடங்களில் எவ்வகையான தீனிகளைத் தின்கின்றன? என்பனவற்றை யெல்லாம் நீங்களே அறிந்து கொள்வீர்கள். பறவைகளைக் கூர்ந்து பார்க்கிறவர்களுக்கு அவற்றின் பழக்க வழக்கங்கள், நிறங்கள், அவை இணை கூடுவதற்காக நேசம் செய்தல் முதலியவைகளெல்லாம் உள்ளத்தைக் கவர்வனவாக என்றும் இருக்கும்.

இந்நூலில் வந்துள்ள பறவைகளின்
ஆங்கில - தமிழ்ப் பெயர்த் தொகுதி
Badler கள்ளிச்சிட்டு
Baroet கொடுர்வா
Bee-eater பஞ்சுருட்டான்
Bulbul கொண்டைக் குருவி
Crow காக்கை
Cuckoo கொண்டைக் குயில்
Curlew கண்கிலேடி
Dove புறா
Drongo கரிச்சான்
Duck காட்டு வாத்து
Eagle கழுகு
Falcon லகுடு
Fantail flycatcher விசிறிக் குருவி
Paradise flycatcher வால் குருவி
Goose, wild தாரா
Grebe முக்குளிப்பான்
Gull கடற்காக்கை
Pheasant காட்டுக் கோழி
Hawk வைரி
Heron நாரை

63