பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9அவை இருந்த பக்கம் ஒரு காகம் வந்தது, அந்தச் சிட்டுக் குஞ்சுகள் காகத்தைப் பார்த்து. "அம்மா கட்டிய வீடு இடிந்து விட்டது. இனி நாங்கள் என்ன செய்வோம்?" என்று கேட்டன.

"எனக்கென்ன தெரியும்? நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு அந்தக் காகம் போய்விட்டது.

பிறகு அந்தப் பக்கமாக ஒரு கிளி வந்தது. அந்தச் சிட்டுக் குஞ்சுகள் கிளியைப் பார்த்து, "அம்மா கட்டிய வீடு இடிந்து விட்டது. இனி நாங்கள் என்ன செய்வோம்?" என்று கேட்டன.

இப்படியாக அந்தப் பக்கம் வந்த எந்தப் பறவையும் அவற்றிற்கு ஒரு வழியும் சொல்லாமல் போய்விட்டன. கடைசியில் அந்தப் பக்கமாக ஒரு மயில் வந்தது. அந்த மயில் பார்ப்பதற்கு ஒரு தேவதைபோல் அழகாக இருந்தது. அது தன் அழகான தோகையை ஆட்டி ஆட்டிக் கொண்டு வந்தது. அந்த மயிலைப் பார்த்தவுடன், அது எப்படியும் தங்களுக்கு ஒரு வழி சொல்லும் என்ற நம்பிக்கை அந்தச் சிட்டுக் குஞ்சுகளுக்கு உண்டாயிற்று.

அவை, அந்த மயிலைப் பார்த்து, "அம்மா கட்டிய வீடு இடிந்து விட்டது. இனி நாங்கள் என்ன செய்வோம்?" என்று கேட்டன.