பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10அந்த மயில் அவற்றைப் பார்த்து ஒரு புன்சிரிப்புடன் பேசியது.


"நீங்கள் உங்கள் அம்மாவைப் போல் தான் இருக்கிறீர்கள். உங்கள் அம்மா ஒருத்திதான். நீங்கள் நான்கு பேர். ஒருத்தியாக இருந்து அவள் வீடுகட்டி முடித்திருக்கிறாள். அதே செயலை நீங்கள் நான்கு பேரும் சேர்ந்து செய்ய முடியாதா? முயன்றால் முடியும்!" என்று அந்த மயில் சொன்னது. பிறகு அது போய்விட்டது.

"இவ்வளவு நாளும் தங்களுக்கு இந்த எண்ணம் தோன்றவில்லையே!" என்று நினைத்தபோது அந்தக் குஞ்சுகளுக்கு வெட்கமாயிருந்தது.

அன்றே அவை நான்கும் சேர்ந்து வீடுகட்டத் தொடங்கின. இரண்டே நாளில் வீடுகட்டி முடிந்தது. வீட்டுக்குள் குடிபுகும்போது "அம்மா கட்டிய மாதிரி அழகான வீடு" என்று அவை சொல்லிக் கொண்டன.

அந்த வீட்டில் அந்தச் சிட்டுக் குருவிகள் நெடுநாள் இன்பமாக வாழ்ந்தன.

சிட்டுக் குருவிகள் பாடிய பாட்டு :

 
அம்மா கட்டித் தந்தது போல்
அழகு வீடு கட்டிவிட்டோம்
சும்மா குந்தி யிருந்திருந்தால்
சுகமாய் வாழ முடிந்திடுமோ?