பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

தங்கம்மாள்தான் தன் அம்மா என்று அவள் எண்ணிக்கொண்டிருந்தாள். பொன்னப்பர்தான் தன் அப்பா என்று அவள் நம்பிக்கொண்டிருந்தாள்,

முத்துமணியைப் பெற்ற தாய் கண்ணம்மாளும், அவள் தந்தை கண்ணப்பரும் வேறு ஒர் ஊருக்குப் போய்விட்டார்கள். முத்துமணியைத் தவிட்டுக்குக் கொடுத்து விட்டாலும் அவர்களுக்கு எப்பொழுதும் அவள் நினைவாகவே இருந்தது.

இருந்தாலும் அவர்களால் என்ன செய்ய முடியும்? கொடுத்த பிள்ளையைத் திரும்ப வாங்க முடியுமா? முத்துமணியிடம் உயிரை வைத்திருந்த தங்கம்மாள் அவளைத் திருப்பிக் கொடுப்பாளா? அதனால் அவர்கள் முத்துமணியின் நினைவு இருந்தாலும் அவளைப் பார்க்காமலே இருந்து விட்டார்கள்.

முத்துமணிக்கு ஐந்து வயது வந்தது. பொன்னப்பரும் தங்கம்மாளும் அவளைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதென்று முடிவு செய்தார்கள். அவ்வாறே ஒரு சிறிய பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார்கள், அந்தப் பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் வகுப்பு, முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று நான்கு வகுப்புகள் இருந்தன. குழந்தைகள் வகுப்பில் முத்து மணியைச் சேர்த்து விட்டார்கள்.

குழந்தைகள் வகுப்புக்கு ஆசிரியையாக இருந்த பெண்மணியின் பெயர் பவளக் கொடியம்மாள்.பவளக் கொடியம்மாள் குழந்தைகளிடம் மிக அன்பாக இருந்