பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16


பச்சைமணிக்குத் தானும் முத்துமணியைப் போல் அழகாக இருக்க வேண்டுமென்று ஆசை ஏற்பட்டது. முத்துமணியைப்போல் விலை மிகுந்த பாவாடையும், சட்டையும் வேண்டுமென்று அவளுக்கு ஆசையாயிருந்தது.

பச்சைமணி ஒருநாள் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படும்போது அழுதாள். ஏன் அழுகிறாய்?’ என்று பச்சைமணியின் அம்மா கேட்டாள்.

"எங்கள் பள்ளிக்கூடத்தில் முத்துமணி என்று ஒரு பெண் இருக்கிறாள். அவள் எப்போதும் அழகழகான பாவாடை கட்டிக்கொண்டு வருகிறாள். நல்ல நல்ல சட்டை போட்டுக் கொண்டு வருகிறாள். அது மாதிரி எனக்கும் புதுச்சட்டையும் பாவாடையும் வேண்டும்?" என்று சொல்லிப் பச்சைமணி அழுதாள்.

பச்சைமணியின் அம்மாவுக்கு முத்துமணியைப் பற்றி எல்லாம் தெரியும். ஏனென்றால் அவர்கள் வீடு பால்கார கண்ணப்பர் முன்பு இருந்த தெருவிலேயே இருந்தது. கண்ணப்பர் முத்துமணியைக் கொண்டு போய்த் தவிட்டுக்குக் கொடுத்துவிட்டு வந்ததும் அவளுக்குத் தெரியும்.

"பச்சைமணி, அழாதே அந்த முத்துமணி தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை. அவள் புதுப்பாவாடையும் பட்டுச்சட்டையும் போட்டால் உனக்கென்ன? நீ அம்மா வீட்டுப் பிள்ளை! அருமையான பிள்ளை!