பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21``ஐயையோ! வேண்டாம். அப்பா அம்மாவுக்குத் தெரிந்தால் போக விட மாட்டார்கள்?’ என்றான் கந்தன்.

``சரி. இரவு பத்துமணிக்கு வருகிறேன். நீ விழித்துக் கொண்டிரு என்று சொல்லிவிட்டு முத்து மணி வீட்டுக்குள் போனாள்.

அன்று இரவு சாப்பாட்டுக்குப் பிறகு எல்லாரும் தூங்கி விட்டார்கள். ஆனால் முத்துமணி மட்டும் தூங்கவில்லை. வீடு முழுவதும் ஒரே அமைதியாக இருந்தது

இரவு மணி பத்து அடித்தது. முத்துமணி மெதுவாகப் படுக்கையிலிருந்து எழுந்தாள். ஒசைப்படாமல் கதவைத் திறந்து கொண்டு கட்டுத்துறைக்குச் சென்றாள்,

அங்கு கந்தன் சொன்னபடி வைக்கோல் போரில் படுத்திருந்தான். அவன் முத்துமணியைக் கண்டவுடன் எழுந்தான். அவள் அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

இரண்டு பேரும் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்கள். காட்டுப் பாதையில் நடந்து சென்றார்கள். .